பார்ட்டிக்கு போன இடத்தில் சரக்கு அடிக்கிறார் சிவகாமி.

Raja Rani 2 Episode Update 21.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. பாட்டுக்காக சரவணன் கோட்டு சூட் அணிந்து வர அவருடைய அப்பாவும் கோட்டு சூட்டில் தயாராக உள்ளார். அதன் பிறகு அனைவரும் ஒருவரையொருவர் சூப்பர் என புகழ்ந்து கொண்டு பார்ட்டிக்கு கிளம்புகின்றனர்.

பார்ட்டிக்கு போன இடத்தில் சரக்கு அடிக்கும் சிவகாமி.. கோபப்பட்ட சந்தியா - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பார்ட்டிக்கு வந்ததும் அங்கு இருப்பவர்கள் சரக்கு அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சிவகாமி இது சரியான இடமா தெரியல. வாங்க நம்ம ரூமுக்கு போகலாம் என சிவகாமி கூப்பிடுகிறார். அனைவரும் சிவகாமியை சமாதானம் செய்து ஒரு வழியாக அனுப்பி இருக்க வைக்கின்றனர்.

ஆதி டான்ஸ் ஆட சென்றதைத் தொடர்ந்து அர்ச்சனா செந்திலை அழைத்துக்கொண்டு டான்ஸ் ஆட சென்றுவிடுகிறார். பிறகு சரவணனின் அப்பா சிவகாமியை கூட்டிக்கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்து விடுகிறார்.

சந்தியா அந்த பக்கமாக நகர்ந்து சென்று நிற்க அதற்கிடையில் சரவணனை சக பெண் போட்டியாளர் ஒருவர் மேடைக்கு அழைத்துச் சென்று நடனமாட வைக்கிறார். இதனை பார்த்த சந்தியா கோபித்துக்கொண்டு அப்படியே வெளியே கிளம்பி விடுகிறார். அதன்பிறகு சரவணன் வெளியே சென்று ஒரு குழந்தையை கூப்பிட்டு காதில் சந்தியாவிடம் சென்று அவருக்கு ஒரு முத்தம் கொடுக்குமாறு சொல்லி அனுப்புகிறார்.

அந்தப் பையனும் சென்று சந்தியாவை ஆன்ட்டி என சொல்ல ஆன்ட்டினு சொல்லக் கூடாது என சொன்னதும் அக்கா என சொல்லி கையில் இருக்கும் சாக்லேட்டை வாங்கி கொள்கிறார். பிறகு உங்களுக்கு ஒன்னு தருணம் என சந்தியாவை கீழே குனிய சொல்லி முத்தம் கொடுக்கிறார். இதை அந்த அங்கிள் தான் கொடுக்க சொன்னார் என சரவணனை போட்டுக் கொடுத்து விட்டு ஓடி விடுகிறான்.

பார்ட்டிக்கு போன இடத்தில் சரக்கு அடிக்கும் சிவகாமி.. கோபப்பட்ட சந்தியா - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு சந்தியா சரவணனிடம் வந்து அந்தப் பையன் கிட்ட என்ன கொடுக்க சொன்னீங்க என கேட்க எனக்கு ஒன்னும் தெரியாது என சரவணன் கூறுகிறார். பிறகு உங்களுக்கு டான்ஸ் ஆட தெரியுமா எனக் கேட்டு சந்தியாவை மேடைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு இருவரும் டான்ஸ் ஆடுகின்றனர்.

இந்த பக்கம் சிவகாமி எனக்கு ஜூஸ் மட்டும் போதும் என கூறுகிறார். அவருடைய கணவர் ஜூஸ் என நினைத்து சரக்கை கொண்டு வந்து கொடுக்கிறார். இது தெரியாமல் சிவகாமி இரண்டு டம்ளர் குடித்து விட்டு இன்னொரு டம்ளர் கிடைக்குமா என கேட்கிறார். இந்த பக்கம் சந்தியாவும் சரவணன் பேசிக்கொண்டிருக்க போட்டி பற்றி பேச அதுபற்றி இப்போது எதுவும் பேசக்கூடாது இது பார்ட்டி செய்கிற நேரம் என டான்ஸ் ஆடுகின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.