சிவகாமியை கீழே தள்ளி விட்டுள்ளார் சந்தியா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சக்கரை நோட்டின் பணத்தைப் பிரித்து வைக்கும் பேண்ட் இருப்பதை பார்த்து இது எப்படி உன்னிடம் வந்தது என கேட்க மயில் அக்கா தான் கொடுத்தாங்க வீடு பெருக்கும்போது இதையும் பெருக்கினாங்க அப்போ நான் இதை எடுத்துக்கிறேன்னு சொன்னதும் கொடுத்தாங்க என சொல்கிறான்.

சிவகாமியை கீழே தள்ளிய சந்தியா.. கல்யாண விஷயத்தில் கைவிரித்த செந்தில், ஆதி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன் பிறகு எல்லோரும் வீட்டில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருக்க சிவகாமியின் மட்டும் தூங்கிக் கொண்டிருப்பதாக சொல்கின்றனர் இதனை எடுத்து சந்தியா போலீஸ் கேட்டபின் வீட்டுக்கு வந்து சிவகாமி இடம் எல்லாரையும் அடக்கி வைத்து ஆள நினைக்கறீங்க, உங்க புள்ளைங்க உங்க கண்ட்ரோல்லையே இருக்கணும் என நினைச்சா அவங்களுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்க ஒரு டப்பாவில் ஊறுகாய் போட்டு வைக்க வேண்டியது தானே நக்கலாக பேச சிவகாமி சந்தியாவை அடிக்க பாய உடனே சந்தியா சிவகாமி கையை பிடித்து கீழே தள்ளுவது போல கனவு கண்டு அலறி எழுதுகிறார்.

இதனையடுத்து எல்லோரும் அமர்ந்து ஆதியின் கல்யாணத்துக்காக என்ன செய்வது பணத்தை எப்படி ரெடி செய்வது எனப் பேச சரவணன் கையில் ஏதும் பணம் இல்லை கடன் கேட்டு இருக்கேன் என சொல்கிறான். செந்தில் கையில எதுவும் இருப்பு இல்லை என கை விரித்து விட ஆதி என் கிட்டயும் பணம் எதுவும் இல்ல லோன் எதுவும் போட முடியாது என கூறி விடுகிறார்.

உடனே சந்தியா விடுங்க பாத்துக்கலாம் பணத்தை நான் ரெடி பண்ணுறேன் என சொல்ல நீ எப்படி பண்ணுவ என சிவகாமி கேட்க என்கிட்ட கொஞ்சம் நகை இருக்கு அதை அடகு வைத்து விடலாம் அப்படி இல்லன்னா விட்டுடலாம் என கூறுகிறார். உடனே சிவகாமி இந்த வீட்டில பிரச்சனைனா முதல்ல உதவி செய்ய வரது சந்தியாவும் சரவணனும் தான். வேற எல்லாரும் வாயில கொழுக்கட்டை வெச்ச மாதிரி அமைதியா இருக்கீங்க எல்லாம் சுயநலமா இருக்கீங்க என்ன திட்டுகிறார்.

சிவகாமியை கீழே தள்ளிய சந்தியா.. கல்யாண விஷயத்தில் கைவிரித்த செந்தில், ஆதி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு எல்லோரும் கோவிலுக்கு சென்று சாமிக்கு பத்திரிக்கை வச்சு சாமி கும்பிடுகின்றனர். பிறகு எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுக்க தொடங்கி விடலாம் என திட்டம் போடுகின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.