வீட்டை விட்டு வெளியே அனுப்ப என்ன காரணம் என விபத்துக்குப் பிறகு சந்தியாவிடம் சரவணன் உண்மையை கூறியுள்ளார்.

Raja Rani 2 Episode Update 20.09.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி. பஸ் விபத்தில் இருந்து தப்பிய சந்தியாவும் சரவணனும் ஒருவழியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட நிலையில் இருவரும் தங்களுக்குள் மனதில் இருந்ததை பேசிக்கொள்கின்றனர். சரவணனிடம் சந்தியா என்னை வீட்டைவிட்டு வெளியே எடுக்க என்ன காரணம் இப்பயாவது சொல்லுங்க எனக் கேட்கிறார்.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஐசிசி வரட்டும் : இன்சமாம் வலியுறுத்தல்

உங்க பையில நான் விவாகரத்து பேப்பரை பார்த்தேன். நீங்க இப்படியான முடிவை எடுத்து இருப்பதை பார்த்து நான் நொந்து போனேன். உங்களை விடவும் மனசில்ல. அதேசமயம் உங்கள நினைச்சு பரிதாபமாகவும் இருந்தது. அதனாலதான் எல்லா பழியையும் என் மேல போட்டுக்கிட்டு உங்களை வெளியே அனுப்ப உங்கள வெறுக்கிற மாதிரி நடித்தேன் என கூறுகிறார். நடித்தது எனக்கு நரக வேதனையாக இருந்தது எனக் கூறுகிறார்.

வீட்டை விட்டு வெளியே அனுப்ப என்ன காரணம் விபத்துக்குப் பிறகு சந்தியாவிடம் உண்மையைக் கூறிய சரவணன் - ராஜா ராணி 2 இன்றைய எபிசோட் அப்டேட்.!!

அதன் பின்னால் சந்தியா அந்த விவாகரத்து பேப்பர் நான் வாங்கியதே இல்லை. அனிதா எனக்கே தெரியாமல் என்னுடைய பேக்கில் வைத்து அனுப்பியது எனக்கூற சரவணன் எல்லா தப்பும் என்னுடைய தான் என்ன உணர்ந்து கொண்டேன் இனி உங்களை நான் எக்காரணத்தை கொண்டும் பிரிய நினைக்க மாட்டேன். இனி உங்க முகத்துல அழுகையே வரக்கூடாது சிரிப்பும் சந்தோஷம் மட்டும் தான் இருக்கணும் என கூறுகிறார்.

சந்தியா உங்க வீட்டை விட்டுப் போகனும்னு நினைச்சிருந்தா எனக்கு எவ்வளவோ சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனா நான் அத நினைக்கல. உங்க கூட இந்த வாழ்க்கையோட கடைசி நொடி வரைக்கும் சந்தோசமா வாழனும் தான் நினைத்தேன் என கூறுகிறார். அதன் பின்னர் இருவரும் ஆட்டோவில் வீட்டுக்கு செல்கின்றனர்.

மேடையில் கண் கலங்கிய அழுத நடிகர்! – ஆறுதல் கூறிய Shakeela

சந்தியா சரவணனுக்கு என்னாச்சு என தெரியாமல் அங்கு அனைவரும் பதறி போய் இருந்தனர். சிவகாமி அழுதுகொண்டே இருந்தார். சந்தியா சரவணன் வந்ததும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இனி சந்தியா எங்கேயும் போக மாட்டாங்க இங்கே தான் இருப்பாங்க என சரவணன் கூறியது அனைவரும் சந்தோஷப்பட்டனர்.

அக்கம்பக்கத்தினர் சிவகாமியிடம் சந்தியா மாதிரி மருமகள் கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கணும். சரவணன் கட்டிக்கப்போற பொண்ணு அதிர்ஷ்டசாலி நீ சொல்லிட்டு இருந்தேன் ஆனால் சந்தியா கிடைச்சதுக்கு சரவணன் தான் அதிர்ஷ்டசாலி என கூறினார்கள்‌. இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அர்ச்சனா வயிறு எரிகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்.