பார்வதி காணாமல் போயிருக்கும் நிலையில் சந்தியா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Raja Rani 2 Episode Update 20.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பார்வதியின் கர்ச்சீப்பை சரவணனிடம் காண்பித்து இது நம்ப கடையிலிருந்து தான் எடுத்தேன் பார்வதி நம்ம கடைக்கு வந்து இருக்கிறாள் அதுக்கப்புறம் தான் காணாமல் போய் இருக்கிறாள் எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது எனக் கூறுகிறார்.

பார்வதி காணாமல் போயிருக்கும் நிலையில் குடும்பத்தாருக்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. சந்தியா எடுத்த முடிவு - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அம்மா அப்பா இப்படி உடைஞ்சு போய் இருக்காங்க பார்வதிக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை என சரவணன் கண்கலங்க அவரை ஆறுதல் கூறி தேற்றுகிறார் சந்தியா. பிறகு சந்தியா பார்வதிக்கு எதுவும் ஆகியிருக்காது என் உள்மனசு அதுதான் சொல்லுது என கூறுகிறார்.

இந்தப்பக்கம் அர்ச்சனா செந்திலிடம் செல்வா குறித்து பேசுகிறார் அவன் ரொம்ப பணக்கார வீட்டு பையன் ஊர்ல நிறைய ஏக்கர் நிலம் இருக்காம் பாஸ்போர்ட் எல்லாம் வச்சு இருக்கான். அவனுக்கு என் தங்கச்சி ப்ரியாவை கட்டி குடுக்கலாம்னு இருக்கேன் என சொல்ல இப்போதைக்கு கொஞ்சம் அமைதியா இரு பார்வதி விஷயம் முடியட்டும் பிறகு இதைப் பற்றி பேசலாம் என கூறுகிறார்.

குடும்பத்தார் பார்வதிக்கு என்னாச்சுனு தெரியல என கண் கலங்கி அழுது கொண்டிருக்க அந்த நேரத்தில் கருணாகரன் வீட்டுக்கு வந்து பார்வதி காணாமல் போனது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா அவளை நான் கடத்தல. கண்டிப்பா பார்வதி கிடைக்கணும் ஆனா அவ என்கிட்டே ஒருத்தன் கிட்ட சிக்கி சின்னாபின்னமாகி கிடைக்கணும். இந்த ஊர் முன்னாடி நீங்க அசிங்கப்பட்டு நிற்கும் என கூறுகிறார். கருணாகரனுக்கு சந்தியா பார்ப்பதற்கு ஒரே ஒரு கீறல் கூட இல்லாமல் அவளை எப்படி வீட்டுக்கு கொண்டு வரும் என்பதை மட்டும் பாரு என சவால் விடுகிறார்.

இதுபற்றி குடும்பத்தார் பேசிக் கொண்டிருக்கிறார் அந்த நேரத்தில் வீட்டிற்கு ஒரு பெரிய மனுஷங்க வருகின்றனர். ஊரில் நாளைக்கு திருவிழா நடக்க இருப்பதால் தென்காசிக்கு பெருமை சேர்த்த சரவணனுக்கு தான் முதல் மரியாதை செலுத்த இருக்கிறோம். புதுசா கல்யாணம் ஆன நம்ம ஊர் பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பரிவட்டம் கட்டுவது பழக்கம். அதனால பார்வதியையும் மாப்பிள்ளையையும் கூட்டிட்டு வாங்க என கூறுகிறார்கள். இதைக்கேட்டு இன்னும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

பார்வதி காணாமல் போயிருக்கும் நிலையில் குடும்பத்தாருக்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. சந்தியா எடுத்த முடிவு - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

என்ன செய்வது என குடும்பத்தார் குழம்ப சந்தியா நாளைக்கு கோவிலுக்கு போகலாம் பார்வதி கிடைத்து விடுவான் என நம்பிக்கை இருக்கு என கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.