பாஸ்கர் வீட்டுக்கு வந்த நிலையில் அர்ச்சனா அதனை கொளுத்திப் போட விக்கி போடும் திட்டத்தால் குடும்பத்தார் அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.

Raja Rani 2 Episode Update 20.04.22 : தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் சந்தியா கோவிலில் கஷ்டப்பட்டு விளக்கு ஏற்றிக் கொண்டு இருக்க அப்போது சரவணன் அங்கு வந்து அவருக்கு உதவி செய்கிறார். பிறகு இருவரும் சேர்ந்து எல்லா விளக்குகளையும் ஏற்றி முடிக்கின்றனர். இந்த நேரத்தில் சிவகாமி வந்து விட சரவணன் ஓடி ஒளிந்து கொள்கிறார். பிறகு சந்தியா தான் எல்லா விளக்குகளையும் ஏற்றி உள்ளனர் என நினைத்துக்கொண்டு அவரை பாராட்டுகிறார். அதன் பின்னர் உன்னை கிண்டலடித்த பெண்மணியை அழைத்து சந்தியாவை பற்றி பெருமையாக பேசுகிறார். பிறகு இருவரும் சாமி கும்பிட சென்ற பிறகு சரவணன் கொண்டுவர சிவகாமி நீ எப்படி இங்க வந்த என கேட்கிறார். இந்த பக்கம் ஆர்டர் கொடுக்க வந்தேன் அதான் சாமி கும்பிட்டு போகலாம் என வந்ததாக சொல்கிறார். பிறகு கடையில் நல்ல கூட்டம் என சொல்ல சரி நீ சந்தியாவை கூட்டிக்கொண்டு இப்படியே கிளம்பு நான் நடந்து வீட்டுக்கு போகிறேன் என கூறுகிறார். பிறகு சரவணன் சந்தியாவை கிளாஸுக்கு அழைத்துச் செல்கிறார்.

வீட்டுக்கு வந்த பாஸ்கர்.. கொளுத்திப் போட்ட அர்ச்சனா, குடும்பத்தாருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!! 

இந்த பக்கம் அர்ச்சனா ரோட்டில் நடந்து வந்து கொண்டிருக்கும்போது விக்கி எதிரே வருகிறார். விக்கி பார்வதிக்கு பாஸ்கருக்கு கல்யாணம் நடக்கப் போகுதுன்னு சந்தோஷமா இருக்கீங்களா என்ன கேட்க நீ வேற வெறுப்பேத்தாத என அர்ச்சனா கூறுகிறார். கல்யாணத்தை நிறுத்த என்கிட்ட நிறைய வழி இருக்கு நான் நிச்சயம் கல்யாணத்தை முடித்து விடுவேன் நீங்க உங்க தங்கச்சியை பாஸ்கருக்கு கல்யாணம் பண்ணி வைக்க தயாராகிடுங்க என சொல்கிறார். அர்ச்சனா இதனால் ஓரளவிற்கு சந்தோஷப்படுகிறார்.

அதன்பிறகு வீட்டில் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க பாஸ்கர் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். பத்திரிகையை ஆதி, பார்வதி மற்றும் அவருடைய அப்பாவிடம் காண்பிக்க அவர்கள் அதைப் படித்து பார்த்து சந்தோஷப் காட்டுகின்றனர். பிறகு பாஸ்கரை பார்வதிக்கு பேசுவதற்காக ஆதி எல்லோரையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்று விடுகிறார். இவர்கள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க பிறகு ஓடிப்பிடித்து விளையாட இந்த நேரத்தில் சிவகாமி உள்ளே வந்து விடுகிறார். பாஸ்கர் அப்படியே லேசாக இங்கிருந்து கிளம்பி கொள்ள பிறகு பார்வதியை திட்டுகிறார். கூடவே அர்ச்சனா இந்த மாதிரி எல்லாம் பண்ணா அப்புறம் அது குடும்பத்துக்கு தான் கெட்ட பேரு. குடும்ப பேரை கெடுத்துடாத என போட்டுக் கொடுக்க பார்வதியின் அப்பா சிவகாமியுடன் இதுல என்ன தப்பு இருக்கு? நமக்கு நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு நான் உன்னை எப்படி எல்லாம் வந்து பார்த்து விட்டு போவேன் பழைய கதைகளை ஆரம்பிக்க பார்வதி நீங்க இப்படி எல்லாம் லவ் பண்ணிட்டு என்ன வந்து குறை சொல்றீங்க என கிண்டலடிக்க சிவகாமி உள்ளே சென்று விடுகிறார்.

வீட்டுக்கு வந்த பாஸ்கர்.. கொளுத்திப் போட்ட அர்ச்சனா, குடும்பத்தாருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!! 

அதன்பிறகு அர்ச்சனா பத்திரிக்கையை எடுத்து அதில் பார்வதி என இருக்கும் பெயரை அழித்துவிட்டு பிரியா என எழுதுகிறார். என் தங்கச்சிக்கும் பாஸ்கரிடம் தான் கல்யாணம் நடக்கும் அன்னைக்கு நீங்க எல்லோரும் எப்படி கதற போறீங்கனு பார்க்கிறேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.