அர்ச்சனா பார்வதியின் திருமணத்தை நிறுத்த சதி திட்டம் தீட்டுகிறார்.

Raja Rani 2 Episode Update 19.04.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் சிவகாமி சந்தியாவை கோவிலுக்கு அழைத்து நிலையில் சந்தியா என்ன செய்வது என்று தெரியாமல் சரவணனுக்கு ஃபோன் போட சரவணன் அவர் மட்டுமே பேசிக் கொண்டிருக்க கடுப்பான சந்தியா கொஞ்சம் என்னை பேச விடுங்க, நான் ரொம்ப டென்ஷனா போன் பண்ணேன் என சொல்லி சிவகாமி கோவிலுக்கு அழைத்த விஷயத்தை கூறுகிறார்.

அர்ச்சனா போட்ட சதி திட்டம்.. கோவிலில் சந்தியாவை திட்டித்தீர்த்த சிவகாமி, சரவணன் செய்த செயல் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன்பிறகு சிவகாமி சந்தியாவை அழைத்து திரியை எப்படி திரிப்பது? விளக்கு எப்படி ஏற்ற வேண்டும்! விளக்கு ஏற்றுவதால் என்ன நன்மை? ஏன் விளக்கேற்ற வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் கூறுகிறார். சிவகாமி சொல்லிக்கொடுத்தது போலவே திரியை திரிக்கிறார் சந்தியா. பிறகு கோவிலுக்கு போன இடத்தில் இவர்களை பார்த்தவர்கள் இருவரும் அம்மா பொண்ணு போல இருப்பதாக கூறுகின்றனர்.

இந்த பக்கம் அர்ச்சனா தன்னுடைய தங்கைக்கு போன் செய்து அப்பா அம்மாவைக் கூப்பிட்டு போனை லவுட் ஸ்பீக்கரில் போடு என சொல்கிறார். எங்க மாமியார் வீட்ல உங்களுக்கு வந்து பத்திரிக்கை வெப்பாங்க, பார்வதி கல்யாணத்துக்கு நீங்களும் வாங்க, ஆனா பாஸ்கருக்கும் பிரியாவுக்கும் தான் கல்யாணம் நடக்கும் என சொல்கிறார். உன்னால பட்ட சிங்கம் எல்லாம் இப்போதைக்கு எதுவும் வேண்டாம் என சொல்லியும் கேட்கவில்லை நான் சொல்றத மட்டும் நீங்க செய்யுங்க என கூறுகிறார். காரணம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டேன் என கூறுகிறார்.

பிறகு கோவிலில் சந்தியா அகல் விளக்குகளை வைத்து எண்ணெயை ஊற்றி திரி போட்டு விளக்கேற்ற தொடங்குகிறார். கடவுளிடம் அத்தையை ஏமாற்றுவது எங்களுக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது ஆனால் என்னுடைய கனவு இப்போது சரவணனின் கனவாக இருக்கிறது. அதனால் அது எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த வேண்டுதலை நான் நல்லபடியாக நிறைவேற்றினால் அது அத்தைக்குத் கொஞ்சம் நம்பிக்கையாக இருக்கும் அதற்கான தைரியத்தையும் தெம்பையும் எனக்கு கொடு கடவுளை வேண்டிக் கொள்கிறார். அதன்பிறகு சிவகாமி என்னுடைய வம்சம் தழைக்கணும் சரவணனுக்கு ஒரு வாரிசு வரணும் அதுக்கு நீதான் அருள் புரியவேண்டும் என வேண்டிக் கொள்கிறார்.

அர்ச்சனா போட்ட சதி திட்டம்.. கோவிலில் சந்தியாவை திட்டித்தீர்த்த சிவகாமி, சரவணன் செய்த செயல் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு சந்தியா விளக்கேற்றி தொடங்கி அதை சரியாக ஏற்க முடியாமல் தவிக்கிறார். அப்போது அந்தப் பக்கம் வந்த இருவர் சந்தியா விளக்கு ஏற்றுவதில் பார்த்து சிவகாமியை கிண்டலடிக்க சிவகாமி உனக்கு மனசுல நல்லபடியா வேண்டுதலை நிறைவேற்றும் என்ற எண்ணம் இல்லை. குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையும் இல்லை அதுதான் கடவுள் இப்படி காட்டிக் கொடுக்கிறார் என திட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு சந்தியா விளக்குகளை தனியாக ஏற்றுக் கொண்டிருக்க அவருக்கு சரவணன் உதவி செய்யத் தொடங்குகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.