அர்ச்சனா கொளுத்திப் போட சிவகாமியிடம் கையும் களவுமாக சிக்கி உள்ளனர் சந்தியா சரவணன்.

Raja Rani 2 Episode Update 18.10.21 : தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணனுக்கு சாப்பாடு எடுத்துட்டு போன சந்தியாவை அழைத்துக்கொண்டு சரவணன் பைக்கில் ஊர் சுற்றினார். இருவரும் ஜாலியாக பைக்கில் சென்று கொண்டிருந்த போது சந்தியா இந்த பைக் நம்பர் வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் தான் என சொல்லிவிடுங்கள். ஆதி செந்தில் என யார் வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்திக் கொள்ளட்டும் என கூறுகிறார். சரவணன் சரி என சொல்கிறார்.

எறிப்பந்து போட்டி : தேர்வான வீரர்கள் விவரம்..

கொளுத்திப் போட அர்ச்சனா.. கையும் களவுமாகச் சிக்கிய சந்தியா சரவணன் - ராஜா ராணி 2 இன்றைய எபிசோட் அப்டேட்.!!

ரொம்ப தூரம் பைக்கில் சென்று விட்டதால் சந்தியா கடைக்கு வண்டியை திருப்புங்கள் என கூறினார். இருவரும் கடைக்கு வந்து கொண்டிருக்கும் போது தன்னுடைய கடையிலிருந்து இதனை நோட்டம் பிடிக்கிறார் அர்ச்சனா. அதன் பின்னர் சிவகாமிக்கு போன் செய்து இருவரும் பைக்கில் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை போட்டுக் கொடுக்கிறார்.

நீங்களே பேசிட்டு இருந்தா நான் எப்படி பேசுறது? – கடுப்பான Andrea Jeremiah | HD

உடனே சிவகாமி கடைக்கு வந்து முறுக்கு சுட்டு கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் இருவரும் பைக்கில் வந்து இறங்க சிவகாமியுடன் கையும் களவுமாக சிக்கி கொள்கின்றனர். வழக்கம்போல் சிவகாமி வேலையை கெடுத்து சரவணனை இப்படி பைக்கில் கூட்டிக்கொண்டு சுத்தலாமா என சந்தியாவை திட்டுகிறார். பின்னர் நான்தான் சந்தியாவை வற்புறுத்தி கூட்டிட்டு போனேன் என சரவணன் கூற நீ பொய் சொல்லாத என திட்டுகிறார். அதன்பிறகு சந்தியாவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு சரவணனுக்கு சாப்பாடு பரிமாறுகிறார். நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கிறது எனக்கும் சந்தோஷம்தான். ஆனால் உனக்கு ஊரில் ஒரு நல்ல பெயர் இருக்கிறது அதையும் நீ பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார். ஞாயிற்றுக்கிழமை கடை லீவு தானே அன்னைக்கு உன் பொண்டாட்டியை கூட்டிகிட்டு சுத்து. இப்போது கடையில் வேலையை பார் என்ன கூறுகிறார்.

இந்த நேரத்தில் அர்ச்சனா அவரு மிக்சர் கேட்டார் என கடைக்கு வருகிறார். பின்னர் அர்ச்சனா தன்னிடம் உங்கள் இருவரையும் கூட்டிக் கொடுத்ததாக சிவகாமி கூற அர்ச்சனா அதிர்ந்து போகிறார். ஏற்கனவே அவருக்கு என்ன கண்டா ஆகாது. இப்போ வேற போட்டு கொடுக்கிறார்களே என யோசிக்கிறார். அதன்பிறகு மிக்சரை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.