சந்தியாவுக்கு போலீஸ் அதிகாரிகள் வைத்த டெஸ்ட்டில் அவர் பாஸாகி உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. போலீஸ் அதிகாரிகள் சந்தியாவை இன்டர்வியூ செய்யும் போது பல கேள்விகளை கேட்க அதற்கெல்லாம் சாதுர்யமாக பதில் அளித்துள்ளார். கடைசியில் பெண் போலீஸ் உங்களை கோபப்படுத்த தான் அப்படி பேசினேன் ஆனால் நீங்க ரொம்ப பொறுமையா அழகா பதில் சொன்னீங்க என பாராட்டுகிறார்.

சந்தியாவுக்கு போலீஸ் அதிகாரிகள் வைத்த டெஸ்ட்.. கடைசியில் ஜெசி சொன்ன வார்த்தையால் சிவகாமி கொடுத்த அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் செந்தில் கடைக்கு பக்கத்தில் இருக்கும் கடை விற்பனைக்கு வருவதாக தகவல் கிடைக்க அர்ச்சனா அதை நாமே வாங்கி விடலாம் என சொல்ல செந்தில் ஆதிக்கு கல்யாணம் என நிறைய செலவு இருக்கு என சொல்கிறான். ஆனால் அர்ச்சனா அவன் கல்யாணத்துக்கு எல்லாம் எதுவும் செலவு பண்ண கூடாது அவன் பேங்க்ல வேலை பண்றான் அவங்க மாமனார் சைடு நல்ல பணக்கார குடும்பம் எல்லாத்தையும் அவங்க பார்த்துப்பாங்க நாம நமக்காக சேர்த்து வைக்கிறதை பார்க்கணும் என ஏற்றி விடுகிறார்.

அதற்கு அடுத்தபடியாக சந்தியாவும் சரவணனும் வீட்டுக்கு வர சிவகாமி உட்பட எல்லோரும் சென்னை பயணம் குறித்து விசாரிக்கின்றனர். பிறகு அர்ச்சனா கிளப்பி விட சிவகாமி வேலை இந்த ஊரில் மட்டும் தான் இருக்க வேண்டும் வேறு எந்த ஊருக்கும் போகக்கூடாது. அப்படி வேற ஊரில் வேலை கொடுத்தால் அந்த வேலையே தேவை இல்லை என சொல்லிவிடு என கூறுகிறார். பிறகு சரவணன் சிவகாமியிடம் எடுத்து பேச முயற்சி செய்து முடியாமல் போகிறது.

சந்தியாவுக்கு போலீஸ் அதிகாரிகள் வைத்த டெஸ்ட்.. கடைசியில் ஜெசி சொன்ன வார்த்தையால் சிவகாமி கொடுத்த அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்ததாக வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்க அப்போது திடீரென ஜெசி வீட்டார் வருகின்றனர். வேலை விஷயம் குறித்து பேச ஜெசி தனக்கு அதெல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லை என சொல்ல சிவகாமி அப்பாடா நல்ல விஷயமா போச்சு என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஜெஸ்ஸியின் அப்பா ஏன் அப்படி சொல்றீங்க எனக்கு கேட்க ஆதி வேலைக்கு போகிறான். ஜெஸ்ஸியும் வேலைக்கு போயிட்டா குடும்பத்தை யாரு கவனிக்கிறது என சிவகாமி சொல்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.