விபத்தினால் ஒருவழியாக ஒன்று சேர்ந்துள்ளனர் சரவணன் மற்றும் சந்தியா.

Raja Rani 2 Episode Update 17.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் ராஜா ராணி 2. சந்தியாவும் சரவணனும் சென்ற பேருந்து லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பேருந்தில் இருந்தவர்கள் பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தை நேரில் பார்த்த சரவணன் சந்தியாவிற்கு என்ன ஆனது என தேடி அலைகிறார். ஆனால் அவருடைய கண்ணுக்கு சந்தியா தெரியவே இல்லை.

தமிழகத்தில், வியாபாரிகள்போல பயங்கரவாதிகள் சதித்திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை

ஒருவழியாக ஒன்று சேர்ந்த சரவணன், சந்தியா - ராஜா ராணி 2 இன்றைய சீரியல் எபிசோட் அப்டேட்.!!

இன்னொருபுறம் வீட்டில் சந்தியா சரவணன் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர். சிவகாமி சரவணன் சந்தியாவுக்கு என்னாச்சு எனக்கே தெரியாமல் கதற மயக்கம் போட்டு விழுகிறார். பின்னர் செந்தில், ஆதி மற்றும் சரவணன் ஆகியோர் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு புறப்படுகின்றனர்.

அர்ச்சனா அமர்ந்து கொண்டே இருக்க இதனை பார்த்த பார்வதி சந்தியா அண்ணிக்கு இப்படி நடந்தது நினைச்சு இவங்க மட்டும் தான் சந்தோஷப்படுவாங்க என நினைத்து கொண்டிருக்கிறார். ஆனால் அர்ச்சனா அழுது கொண்டிருப்பதை பார்த்தது பார்வதி ஓடி போய் என்ன என்று கேட்கிறார்.

எனக்கு சந்தியாவை பிடிக்காது தான் அவளை நான் எதிரியாக பார்த்தேன் இப்போ வரைக்கும் அப்படித்தான் பார்க்கிறேன். ஆனால் அவள் இந்த உலகத்தை விட்டுப் போகனும்னு நான் ஒரு நாளும் நினைத்து பார்த்தது கிடையாது. அவ ரொம்ப நல்லவ. நான் எவ்வளவு குடைச்சல் கொடுத்தாலும் அதை எதையும் கண்டுக்காம அமைதியா இருப்பா. இதனையடுத்து பார்வதியும் நானும் சந்தியா அண்ணிய தப்பா தான் நினைச்சேன் ஆனா இப்போ தான் அவங்கள புரிஞ்சிக்கிட்டேன் ஆனால் இந்த நேரத்தில் இப்படி ஆகிடுச்சு என்று கூறுகிறார்.

எனக்கு விஜய்க்கும் சண்டை உண்மைதான் – மேடையில் ஆவேச பட்ட Vijay-யின் தந்தை! 

இந்த நேரத்தில் சக்கரை ஓடி வந்து அம்மா போட்டோ வெச்சி தேம்பித் தேம்பி அழுதுட்டு இருக்காங்க என கூற எல்லோரும் ஓடிச் சென்று ஆறுதல் கூறுகின்றனர். விபத்துக்குள்ளான இடத்தில் சந்தியா ஒரு குழந்தையை கையில் வைத்துக்கொண்டு சீக்கிரம் ஸ்டிரக்சர்ஸ் எடுத்துட்டு வாங்க என கத்துகிறார். சந்தியாவின் குரலைக் கேட்ட சரவணன் திரும்பி பார்த்து சந்தியா என கத்த இருவரும் ஓடி வந்து கட்டி கொள்கின்றனர். ‌‌ இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்.