Raja Rani 2 Episode Update 15.09.21

சந்தியா சரவணன் வெளியேற்றத்திற்கு பிறகு குடும்பத்தாருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்துக் கொண்டுள்ளது.

Raja Rani 2 Episode Update 15.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சரவணன் சந்தியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். பின்னர் அவரை பஸ் ஏற்றி விட்ட சரவணன் சந்தியாவிற்கு தெரியாமல் அதே பஸ்ஸில் ஏறினார்.

திருவண்ணாமலை கோவில் தீபத் திருவிழா : நாளை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

சந்தியா சரவணன் வெளியேற்றத்திற்கு பிறகு குடும்பத்தாருக்கு காத்திருந்த அடுத்தடுத்த அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய எபிசோட் அப்டேட்.!!

இதற்கிடையில் சரவணன் வீட்டில் இவர்களது பிரிவு குறித்து அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் சந்தியாவின் தோழி அனிதா அங்கு வந்து சரவணன் ஃபோன் செய்ததாக கூறியதாகக் கூறுகிறார். அதன் பின்னர் சந்தியாவின் அண்ணனும் அண்ணியும் அனிதாவுக்கு போன் செய்து சந்தியா குறித்து விசாரிக்கின்றனர். அப்போது அனிதா நான் சரவணன் வீட்டில்தான் இருக்கிறேன் எனக் கூற அதன் பின்னர் சரவணனின் அம்மா அப்பாவிடம் பேசுகிறார். அந்த குடும்பத்து மேல சந்தியா ரொம்ப அன்பு வச்சிருக்கா அவளைக் கைவிட்டு விடாதீர்கள் என கூறி அழுகிறார்.

என்ன வச்சி படம் எடுக்க பயந்தாங்க! – மேடையில் Emotional ஆன Shanthnu Bhagyaraj | Murungakkai Chips

அனிதா சென்ற அதிர்ச்சியை தொடர்ந்து பின்னாடியே பார்வதிக்கு பார்த்த மாப்பிள்ளை பாஸ்கரும் அவருடைய அம்மாவும் வருகின்றனர். இவர்கள் இருவரும் திடீரென ஏன் வந்தார்கள் எதற்கு வந்தார்கள் என தெரியாமல் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. சிவகாமி பார்வதியிடம் சரவணன் சந்தியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டதை இவர்களிடம் சொல்லாதே என கூறுகிறார். அதன்பிறகு முதல்ல என் அப்பா கிட்ட சொல்லனும் அவரை கூப்பிடு என கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.