ஜெசி வீட்டுக்கு போன இடத்தில் அர்ச்சனா கொளுத்தி போட சிவகாமி சில கண்டிஷங்களை போட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சரவணன் குடும்பத்தார் எல்லோரும் ஜெசியின் வீட்டுக்கு செல்ல அங்கு வெளியில் கோலம் போட்டு இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். பிறகு ஜெசியின் அம்மா வெளியே வந்து நீங்க வரதால ஜெசி தான் நைட் எல்லாம் நெட்ல பார்த்து ப்ராக்டிஸ் பண்ணி இந்த கோலத்தை போட்டா என சொல்லுகிறார்.

ஜெசி வீட்டுக்கு போன இடத்தில் கொளுத்தி போட்ட அர்ச்சனா.. கல்யாண விஷயத்தில் சிவகாமி போட்ட கண்டிஷன் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன் பிறகு அர்ச்சனா ஜெசி புடவை எல்லாம் கட்ட மாட்டா மாடர்ன் டிரஸ்ல தான் வந்து நிற்ப்பா என சொல்ல அதற்கு அப்படியே மாறாக ஜெசி புடவை கட்டி வந்து நிற்கிறார். இதையெல்லாம் பார்த்து அர்ச்சனாவுக்கு பல்பு தான் கிடைக்கிறது.

அதன் பிறகு கல்யாண விஷயம் குறித்து அர்ச்சனா கொளுத்தி போடுகிறார். உங்க மதம் வேற, எங்க மதம் வேற உங்க கலாச்சாரம் வேற, எங்க கலாச்சாரம் வேற கல்யாணம் யாருடைய மதத்தின் படி நடக்கும் அதை பற்றி தெளிவா பேசுங்க என சொல்ல எல்லோரும் அர்ச்சனாவை அமைதியாக இருக்க சொல்ல சிவகாமி அவ சொன்னதும் சரிதானே இப்பவே தெளிவா பேசிட்டா பிரச்சனை இல்லை என சொல்ல சந்தியா ரெண்டு பேரோட கலாச்சாரத்தின் படியும் கல்யாணம் பண்ணலாம் என சொல்கிறார்.

உடனே சிவகாமி கொஞ்சம் அமைதியா இருக்கியா இங்க நான் என்னோட விருப்பத்தை பேச தான் வந்து இருக்கேன் என சத்தம் போட பிறகு ஜெஸ்ஸியின் அப்பா அம்மா நாங்களும் சந்தியா சரவணன் சொன்ன மாதிரி தான் நினைத்தோம் என கூறுகின்றனர். பிறகு சிவகாமி ஆனா முதல்ல கல்யாணம் எங்க முறைப்படி தான் நடக்கணும் அதுல உங்க சம்பர்தாயம் எதுவும் வரக்கூடாது என கூறுகிறார். அப்புறம் உங்க முறைப்படி நடக்கிற கல்யாணத்துக்கு சந்தியா சரவணன் தவிர நாங்க யாரும் வர மாட்டோம் எங்களுக்கு அதெல்லாம் பழக்கம் இல்லை என கூறுகிறார். இதனால் ஜெசி குடும்பத்தார் அதிர்ச்சியாக ஆதி இங்கிலீஷில் பேசி அவர்களை சமாதானம் செய்கிறார்.

அடுத்ததாக சந்தியா பார்வதி மொட்டை மாடியில் ஜெசியிடம் பேசிக்கொண்டு இருக்க அங்கு வரும் அர்ச்சனா இவர்கள் ஒன்றாக பேசுவதை பார்த்து புலம்புகிறார். ஜெசி கழுத்தில் இருக்கும் வைர நகையை பார்த்து சூப்பரா இருக்கு என சொல்ல அது ஆதி வாங்கி கொடுத்தது தான் என சொல்ல வர ஆதி அதனை சொல்ல விடாமல் தடுத்து விடுகிறான்.

ஜெசி வீட்டுக்கு போன இடத்தில் கொளுத்தி போட்ட அர்ச்சனா.. கல்யாண விஷயத்தில் சிவகாமி போட்ட கண்டிஷன் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன் பிறகு ரவி குடிக்க தண்ணீர் கேட்க சிவகாமி நானே போய் எடுத்துட்டு வரேன் என பிரிட்ஜை திறக்க உள்ளே ஒயின் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். உடனே தன்னுடைய கணவரை கூப்பிட்டு காட்ட அப்போது அங்கு வரும் ஜெஸ்ஸியின் அப்பா நாங்க வாரத்துல ஒரு நாள் குடும்பத்துடன் உட்கார்ந்து ஒயின் சாப்பிடுவோம் என சொல்ல சிவகாமி இதெல்லாம் எங்க வீட்டுக்கு வந்ததும் நினைச்சு கூட பார்க்க கூடாது என ஜெஸ்ஸியை எச்சரிக்கிறார்.

பிறகு வீட்டுக்கு வந்ததும் அர்ச்சனா நம்ம திட்டம் எதுவும் பலிக்காது போலையே என புலம்பிக் கொண்டிருக்க அங்கு வரும் செந்தில் அர்ச்சனாவின் புலம்பலை கேட்டு சிரிக்க அர்ச்சனா கடுப்பாகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.