சரவணன் குடும்பத்திற்குள் தீவிரவாதி இருப்பது தெரிய வந்துள்ளது.

Raja Rani 2 Episode Update 13.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நான்கைந்து பேர் சேர்ந்து வேண்டிய அமைப்பு செய்யப்போகும் வேலையை வைத்து இந்த அரசாங்கமே நம்மை திரும்பிப் பார்க்க வேண்டும் என பேசிக் கொண்டிருக்கின்றனர். இதற்காக சரியான ஆளை நம்முடைய புதிய தலைமை கைகாட்டி உள்ளது என சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் சரவணன் கடையில் வேலை பார்க்கும் செல்வா உள்ளே நுழைகிறார். இந்த அமைப்பின் முக்கிய புள்ளியாக செயல்படுவது தெரிய வருகிறது. இந்த தென்காசி திருவிழாவில் ஒருவர் மூலம் நாட்டு வெடிகுண்டை வைத்து குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்த போவதாக கூறுகிறார். அந்த ஆள் யார் என்பதை உங்களுக்கு பிறகு சொல்கிறேன் என கூறுகிறார். மேலும் தலைமை உங்களுக்கு சில பொருட்களை அனுப்பி இருப்பதாக கூறி ஒரு பையை செல்வத்திடம் கொடுத்து அனுப்புகின்றனர்.

சரவணன் குடும்பத்திற்குள் தீவிரவாதி, விருந்துக்காக வீட்டுக்கு வந்த பார்வதிக்கு காத்திருந்த பெரும் சிக்கல் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன் பிறகு இந்த பக்கம் வீட்டில் பார்வதி பாஸ்கர் வருகைக்காக சிவகாமி என்னவெல்லாம் செய்யப் போகிறோம் எனும் சொல்லை இதைக் கேட்டு அனைவரும் வியந்து கொள்கின்றனர். ஹோட்டலை காட்டிலும் லிஸ்ட் பெரியதாக இருப்பதாக கூறுகின்றனர்.

பிறகு அர்ச்சனா சரவணன் கடைக்கு வந்து செல்வத்துடன் வெளியில் சென்று சில பொருட்களை வாங்கி வருமாறு சொல்ல செல்வம் அண்ணன் எங்கேயும் போகக்கூடாது என சொல்லி இருக்கிறார் எனக் கூறுகிறார். நான் அனுப்பினேன் நீ சொல்லு அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டார் என அனுப்பி வைக்கிறார் அர்ச்சனா. இந்த நேரத்தில் செல்வத்தில் பேக்கை எடுத்து ஆராய அது செல்வம் ரகசியமாக எடுத்து வந்த பேக் இருப்பதைப் பார்க்கிறார். அதில் பணம் பாஸ்போர்ட் என எல்லாம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இந்த நேரத்தில் செல்வம் வந்துவிடுகிறார். இவ்வளவு நாளா சரவணன் மாமாவை ஏமாற்றிக்கிட்டு இருக்கியா என கேட்க இல்லை நான் வசதியான குடும்பத்தைச் சார்ந்தவர் ஊரில் எனக்கு பத்து ஏக்கர் நிலம் இருக்கு. மயிலுக்கு இதெல்லாம் தெரியாது.

இங்க ஸ்வீட் செய்ய கத்துக்க தான் வந்தேன். பிறகு வெளிநாடு சென்று கடை வைக்க உள்ளேன் என கூற அர்ச்சனாவும் அதை நம்பிக் கொண்டு சென்று விடுகிறார். பிறகு பாஸ்கரும் பார்வதியும் வீட்டுக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருக்கின்றனர். மார்க்கெட்டுக்குச் சென்று பூ வாங்கிக்கொண்டு பிறகு பார்வதி நான் அண்ணன் கடைக்கு சென்று ஸ்வீட் வாங்கி கொண்டு வருகிறேன் என செல்கிறார். பாஸ்கரும் சரி என அனுப்பி வைத்துவிட்டு பழங்களை வாங்க செல்கிறார்.

சரவணன் குடும்பத்திற்குள் தீவிரவாதி, விருந்துக்காக வீட்டுக்கு வந்த பார்வதிக்கு காத்திருந்த பெரும் சிக்கல் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பார்வதி கடைக்கு வர கடையில் சரவணன் இல்லாத நேரத்தில் செல்வம் ரகசியமாக போன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது சரவணன் ஒரு முட்டாள் என்னை ஈஸியாக நம்பி விட்டான். இந்த திருவிழாவில் கோவிலில் வெடிகுண்டு வைக்க ஒரு பெண்ணை தேர்வு செய்திருக்கிறேன். அந்தப் பெண்ணும் இதே ஊர் தான். அதற்காக நான் எவ்வளவு தான் நடித்து நம்ப வைத்து இருக்கிறேன் தெரியுமா என பேசிக் கொண்டிருக்கிறார்.

இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியான பார்வதி நீ இவ்வளவு மோசமானவனா? இப்பவே அண்ணன்கிட்ட சொல்லி உன்னை என்ன பண்றேன் பாரு என கூறுகிறார். உடனே செல்வம் பார்வதியை அடித்து வாயில் துணியை கட்டி கை கால்களை கட்டி போடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.