சிவகாமி போட்ட கண்டிஷனை மீறி சந்தியா அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தியா இடம் உனக்கும் ஆதிக்கும் ஏதாவது பிரச்சனையா நீ சந்தோஷமா இருக்கியா என கேட்க ஜெசி சந்தியாவிடம் உண்மையை மறைக்க முடியாது சொல்லிவிடலாம் என முடிவெடுக்கிறார். ஆனால் இப்போது வேண்டாம் என யோசிக்க சந்தியா உனக்கு எப்போ சொல்லனும்னு தோணுதோ அப்ப சொல்லு என சொல்லி விடுகிறார்.

கண்டிஷனை மீறி சந்தியா எடுத்த முடிவு, அதிர்ச்சியான சிவகாமி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன் பிறகு செந்தில் ஆப்செட்டாக உட்கார்ந்திருக்க அர்ச்சனா அத்தை சந்தியா போலீஸ் ட்ரைனிங் க்கு போகக்கூடாது என்று சொன்னது எனக்கு பழைய மாதிரி இருந்துச்சு என சந்தோஷமாக பேச செந்தில் கெட்ட எண்ணம் தான் இன்னைக்கு நாம இவ்வளவு கஷ்டப்பட காரணம் என திட்டி தீர்க்கிறார்.

பிறகு சந்தியா சரவணனிடம் போலீஸ் ட்ரைனிங்கில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த விஷயங்களை சொல்லி கண்டிப்பாக போலீஸ் ட்ரைனிங் போய் ஆக்கணும் அத்தை கிட்ட பேசுங்க என்ன சொல்ல சரவணன் பேசப் போக அப்போது சிவகாமி கோபமாக இருப்பதால் பேசாமல் வந்து விடுகிறார்.

பிறகு ரவியை வைத்து சிவகாமியிடம் இந்த விஷயத்தை பேச முடிவெடுத்து அவரையும் சம்மதிக்க வைக்கின்றனர். மறுநாள் ரவி சிவகாமி இடம் இந்த விஷயத்தை பற்றி பேச அவர் கோபப்படுகிறார். ஏன் முடியல எந்த மாற்றமும் இல்லை என சொல்ல ரவி யாரையும் வற்புறுத்தி வாழ வைக்கக்கூடாது என சொல்ல அப்போ சந்தியாவேனா வற்புறுத்தறேன்னு சொல்றீங்களா அவளையே கேட்கலாம் என சிவகாமி சந்தியாவை கூப்பிட சந்தியா கையில் பேக்குடன் வர சிவகாமி எல்லாம் பிளான் பண்ணிட்டு தான் பண்றீங்களா என கோபப்படுகிறார்.

கண்டிஷனை மீறி சந்தியா எடுத்த முடிவு, அதிர்ச்சியான சிவகாமி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

நீ போலீஸ் ட்ரைனிங் கேக்க கூடாது என உறுதியாக சொல்லும் சிவகாமி கோலமாவில் கோடு போடுகிறார். இந்த கூட்டத்தாண்டி நீ பயிற்சிக்கு போகக்கூடாது என சொல்ல சண்டியா என்ன மன்னிச்சிடுங்க அத்தை இந்த ஊருக்காகவும் நாட்டுக்காகவும் நான் கண்டிப்பா போய் தான் ஆகணும் என சொல்லி கோட்டை தாண்டி செல்ல சிவகாமி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.