சாமியாரை கையும் களவுமாக பிடித்த சந்தியா திட்டம் ஒன்றை போட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த சாமியாரை வரவேற்று உட்கார வைத்து அவருக்கு பாத பூஜை செய்து ஆசீர்வாதம் வாங்குகிறார் சிவகாமி. பிறகு சந்தியா சல்மா சொன்ன விஷயங்களை ஞாபகம் வைத்து அந்த கோவிந்தன் இவர்தான் என்பதை பரிசோதனை செய்து கண்டுபிடிக்க பக்கத்தில் இருந்த சிறுவனின் பெயரும் கோவிந்தன் என்பதால் கோவிந்தா என கூப்பிட சாமியாரின் முகம் மாறுகிறது.

சாமியாரை கையும் களவுமாக பிடிக்க சந்தியா போட்ட திட்டம்.. கடைசியில் சரவணன் செய்த வேலை - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு சரவணனிடம் இந்த விஷயத்தை சொல்ல அவர் நம்பவில்லை இவர் சக்தி வாய்ந்த சாமியார் என சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு சல்மாவுக்கு போன் போட்டு நீ மால் கட்டப் போறதா சொன்ன இடத்தில் வேறொரு சாமியார் கோவில் கட்ட போறதா மக்களிடம் பணம் வந்து இருக்கிறார் நீ சொன்ன கோவிந்தனும் இந்த சாமியாரும் ஒன்னு தான் என எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நீ சொன்ன விஷயங்கள் எல்லாம் ஒத்துப் போகிறது என சொல்லி அவருக்கு சில ஐடியா கொடுக்கிறார்.

சாமியாரை கையும் களவுமாக பிடிக்க சந்தியா போட்ட திட்டம்.. கடைசியில் சரவணன் செய்த வேலை - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு சல்மா கோவிந்தனுக்கு போன் போட போனை அவருடைய சிஷ்யன் கட் செய்து கொண்டே இருக்கிறார். போன் வருவதாக சொன்னதும் சாமியார் கோவில் வேலைகள் நிறைய இருப்பதாக சொல்லி அங்கிருந்து கிளம்பும் முயற்சி செய்ய சரவணன் அனுப்பி சந்தியா அவரை தடுத்து நிறுத்த வைக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.