குடி போதையில் சண்டைக்கு வந்த செந்திலை சிவகாமி அடிக்க அர்ச்சனா அதிர்ச்சி கொடுக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இத சீரியலில் இன்றைய எபிசோடில் சிவகாமி அர்ச்சனாவும் ஜெஸ்ஸியும் நடுரோட்டில் போட்ட சண்டையை நினைத்து புலம்பி கொண்டு இருக்க அதைவிட செந்தில் பண்ண விஷயம் உனக்கு தெரிஞ்சா நீ தாங்க மாட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல என ரவி கூறுகிறார்.

குடிபோதையில் சண்டைக்கு வந்த செந்தில்.. சிவகாமிக்கு அர்ச்சனா கொடுத்த அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோடு அப்டேட்

இந்த நேரத்தில் சரவணன் வந்துவிட அவர் சிவகாமி சோகமாக இருப்பதை பார்த்து அம்மா என்னாச்சு என கேட்க சிவகாமி பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க என்கிட்ட ஏதாவது மறைக்கிறீங்களா இந்த வீட்டுக்கு நான் வேண்டாத ஆளா போயிட்டனா என்ன சொல்ல நீயும் என்னை கஷ்டப்படுத்தாத சரவணா நீ இந்த வீட்டோட தூண் என பதில் கொடுக்கிறார் சிவகாமி. பிறகு அர்ச்சனா மற்றும் ஜெசி என இருவரும் சண்டை போட்ட விஷயத்தை சொல்ல இந்த நேரத்தில் ஆதி ஜெசியை வேக வேகமாக இழுத்து வந்து இதெல்லாம் நல்லாவே இல்ல எதுக்கு தேவையில்லாமல் ஜெசி கிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருக்கணும் என சத்தம் போடுகிறார்.

பிறகு அர்ச்சனா வெளியே வந்து அவனிடம் சண்டை போட செந்தில் என்னடா என ஆதியிடம் சண்டைக்கு வர சரவணன் இருவரையும் பிரித்து விட முயற்சி செய்தபோது செந்தில் கீழே விழ என்னை பிடித்து தொல்றியா என சரவணன் இடம் சண்டைக்கு வருகிறார். அப்போது சரவணன் புடிச்சி இருக்கியா என கேட்க செந்தில் இல்லை என சொல்ல நான் இவன் குடிச்சிருக்கான் என சொல்ல சிவகாமி அவனை அடிக்கிறார்.

தோலுக்கு மேல வளந்த புள்ளையை இப்படி அடிக்க உங்க கைக்குள் சரியா என அர்ச்சனா சிவகாமியை கண்டமேனிக்கு பேசி நோகடிக்கிறார். சரவணன் எதிர்த்து இவரு தேர்தல் அறுத்துனால அவர் மேலே இருக்க விரும்பி எல்லாத்தையும் அடிச்சு கொறச்சிக்கு பாக்கறீங்களா விட்டா அடிச்சு கொன்னுடுவீங்க போல என பேச சிவகாமி இடிந்து போய் உட்காருகிறார்.

குடிபோதையில் சண்டைக்கு வந்த செந்தில்.. சிவகாமிக்கு அர்ச்சனா கொடுத்த அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோடு அப்டேட்

பிறகு ரூமுக்கு வரும் அர்ச்சனா செந்திலிடம் என் மானமே போச்சு உங்களை யாரு வெளியே வர சொன்னது இனி இந்த வீட்டில் எப்படி தல காட்டுவேன் என சத்தம் போட இப்ப எதுக்குடி இப்படி புலம்பிக்கிட்டு இருக்க என செந்தில் கேட்க அர்ச்சனா சிவகாமி சரவணன் பற்றி தவறாக பேசி ஏற்றி விட முயற்சி செய்ய செந்தில் தேவையில்லாம அவங்கள பத்தி பேசாத இதுவரைக்கும் எங்க அப்பா அம்மா யாரையும் பிரித்துப் பார்த்தது கிடையாது இனிமே இப்படி பேசினா நான் சும்மா இருக்க மாட்டேன் என அர்ச்சனாவின் வாயடைத்துவிட்டு செந்தில் வெளியே வருகிறார்.

வெளியே வந்த செந்தில் அப்பா அம்மாவிடம் மன்னிப்பு கேட்க சிவகாமி இப்படி நீ பண்ணது ரொம்ப தப்பு சரவணன் கிட்ட மன்னிப்பு கேளு என கூற அவன் கிட்ட எதுக்கு நான் மன்னிப்பு கேட்கணும் தம்பி தேர்தல் நிக்கிறான் நிக்கட்டும் இல்லாமல் என்னை எதிர்த்து வேப்பமனு தாக்கல் பண்றான் அவன் எல்லாம் ஒரு அண்ணனா அவன் கிட்ட எல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது, இனிமே நான் குடிக்க மாட்டேன். நடந்த தப்புக்காக மன்னிப்பு கேட்டுக்குறேன் என மன்னிப்பு கேட்டு செந்தில் உள்ளே சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.