பார்வதியின் கல்யாணம் நல்லபடியாக நடக்க காரணமாக இருந்த சந்தியாவுக்கு சிவகாமி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Raja Rani 2 Episode Update 09.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பார்வதியின் கல்யாணம் நல்லபடியாக நடந்ததைப் பற்றி குடும்பத்தார் பேசிக் கொண்டிருக்கின்றனர். சரவணனின் அப்பா ஒரு நிமிஷம் எனக்கு அப்படியே படபடன்னு ஆயிடுச்சு, இன்னும் அந்த படபடப்பு என்னை விட்டு போகல என சொல்ல நான் கவனித்தேன். உங்கள் அப்படி பார்த்ததும் எனக்கு பயமாயிடுச்சு சிவகாமி கூறுகிறார். அந்த சாமியாடி பொம்பள சொன்னது உண்மையாகிடுச்சு. இது நம்ம குடும்பத்துக்கு பெரிய கண்டம் தான் அந்த குல சாமிதான் சந்தியா ரூபத்தில் வந்து கல்யாணத்த நடத்திக் கொடுத்து என கூறுகிறார்.

பார்வதியின் கல்யாணத்தை நல்லபடியாக நடத்திய சந்தியாவுக்கு சிவகாமி கொடுத்த ஷாக்.. மீண்டும் கோர்த்து விட்ட அர்ச்சனா - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு சந்தியா சரவணன் வந்தது அவர்களை உட்கார வைக்க சரவணனின் அப்பா பார்வதியின் கல்யாணத்தை நல்லபடியாக நடக்க உறுதுணையாக இருந்த சந்தியாவிற்கு நன்றி கூறுகிறார். என்ன மாமா நான் யாரோ மாதிரி நன்றி தம்பி உங்க இது நம்ம விட குடும்பம் பார்வதி என்னுடைய நாத்தனார் நான் பண்ணாம வேற யாரு பண்ணுவார் என சந்தியா பேசுகிறார். சிவகாமி என்னதான் இருந்தாலும் நாங்க உனக்கு நன்றி சொல்லியே ஆகணும் என கூறுகிறார் ஆனால் எனக்கு ஒரு விஷயம் மட்டும் தான் பிடிக்கல. போலீஸ் வரைக்கும் போனது எனக்கு சுத்தமா பிடிக்கல. நம்மோட குடும்ப விசேஷத்தில் போலீஸ் வந்தது பிடிக்கல என சொல்கிறார். மேலும் இனிமேல் எது பண்ணாலும் என்கிட்ட சொல்லிட்டு பண்ணி அது எனக்கு அதிர்ச்சி தர விஷயமாய் இருந்தாலும் பரவாயில்லை என கூறுகிறார். எனக்குத் தெரியாமல் எதையும் பண்ண கூடாது என சொல்கிறார்.

அதன்பிறகு சந்தியா சரவணனை போலீஸ் படிப்பு பற்றி சொன்ன சொன்ன சரவணன் அதைச் சொல்லாமல் வீட்டுக்கு கெளம்பலாம் நேரமாகுது எனக் கிளம்பி விடுகிறார். வீட்டுக்கு வந்ததும் எல்லோரும் ஒவ்வொருவராக பார்வதி கல்யாணம் ஆகி போனது பற்றியும் இனி பார்வதி இல்லாமல் எப்படி இருக்கப் போகிறோம் என வருத்தப்பட்டு பேச ஆரம்பிக்கின்றனர்.

சரவணன் இப்போ தான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன் என சொல்லிட்டு போன மாதிரி இருக்கு அதுக்குள்ள வளர்ந்து அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டோம் எனக் கூறுகிறார். இப்படி எல்லோரும் வருத்தப்பட்டுக் கொண்டே இருக்க அத்தனை பேர் என்ன உங்க எல்லாருக்கும் பார்வதி திரும்பி வந்துட்டா சந்தோஷமா இருக்குமா என கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு சந்தியா இந்த காலத்துல இதெல்லாம் சாதாரண விஷயம், வெளியில போனா அது எவ்வளவு பேர் ஜோடி ஜோடியா சுத்துரதை பார்க்க முடியுது. பொண்ணுங்க நம்ப காதலிக்கிறவங்க தப்பானவன் தெரிந்ததும் தூக்கி போட்டுறாங்க, இதெல்லாம் இந்த காலத்துல சர்வ சாதாரணம் என சொல்ல உடனே அர்ச்சனா எங்க வீட்டு பெண்களை நாங்க அப்படி வளக்கல. நீ பேசறது எல்லாம் பார்த்தா உனக்கு ஒரு காதல் இருந்தது போல எனக்கு இப்பவே உண்மை தெரிஞ்சாகனும் என கேட்க ஆமாம் நானும் காதலிச்ச என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எனக்கு அப்பவே தெரியும் உன் வாழ்க்கையில கோளாறு இருக்கும். தைரியமான ஆளா இருந்தா சொல்லு யார் அவன் என கேட்க இவர்தான் இவர்தான் காதலிக்கிறேன் என சரவணனை கை காமிக்கிறார். இதனால் ஷாக்கான அர்ச்சனா உள்ளே சென்று விடுகிறார்.

பார்வதியின் கல்யாணத்தை நல்லபடியாக நடத்திய சந்தியாவுக்கு சிவகாமி கொடுத்த ஷாக்.. மீண்டும் கோர்த்து விட்ட அர்ச்சனா - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு அர்ச்சனா தனியாக உட்கார்ந்துகொண்டு யோசனையில் இருக்க செந்தில் இங்கே என்ன பண்ற என கேட்க அர்ச்சனா கோபப்பட்டு பேசுகிறார். நீ பேசுவதெல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக காரணம் வைத்திருக்க குழந்தைதான். குழந்தை பிறந்ததும் நீ திருந்தலனா அப்புறம் உனக்கு இருக்கு என திட்டி விட்டு உள்ளே செல்கிறார். சந்தியா வேலை எல்லாம் கெட்டுப் போச்சு எப்படியாவது இவளை பழிவாங்கணும் என முடிவு செய்கிறார் அர்ச்சனா.

பிறகு ரூமுக்குள் சரவணன் சந்தியாவின் புடவையை மடித்து வைக்கிறார். இருவரும் பேசிவிட்டு சரவணன் போய் படிங்க என சொல்ல இன்னிக்கு எனக்கு லீவு என சொல்லிட்டு படுத்துக் கொள்கிறார். கால் வலிக்குது கொஞ்சம் கால் அமுக்கி விடுங்கள் என சொல்ல சரவணன் அமுக்கி விட்டு பேசிக்கொண்டே இருக்க அப்படியே தூங்கி விடுகிறார் சந்தியா. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.