சரவணன் வெற்றியால் வீட்டை விட்டு கிளம்பியுள்ளார் செந்தில்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சரவணன் செந்திலை விட 5 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்க எல்லோரும் சரவணனை கொண்டாட பரந்தாமன் எல்லாரும் பணத்த வாங்கிட்டு எனக்கு துரோகம் பண்ணிட்டீங்க என சொல்ல யாருக்கு வேணும் உன்னுடைய பணம் என டோக்கனை தூக்கி வீசுகின்றனர்.

சரவணன் வெற்றியால் வீட்டை விட்டு கிளம்பிய செந்தில், சந்தியாவுக்கு நடந்த துப்பாக்கி சூடு - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு செந்தில் கோபமாக வீட்டுக்கு வர சரவணன் உடன் வந்த சிவகாமி அவனை நிற்க வைத்து ஆரத்தி எடுக்க ஆரத்தி தட்டை தட்டு விடுகிறார் செந்தில். என்ன பத்தி நீங்க கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல என சொல்லி கோபமாக அர்ச்சனாவை கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார். எங்க செல்வது என தெரியாமல் நடந்து செல்ல அப்போது ஆட்டோவில் சிவகாமி மற்றும் அவருடைய கணவரும் வந்து இறங்கி நீங்கள் எங்க போறீங்க அங்கேயே நாங்களும் வரோம், நீ இல்லாம அந்த வீட்ல இருக்க முடியாது என சொல்கின்றனர்.

சரவணன் தான் எங்களை அனுப்பி வைத்தான் என சொல்லிக் கொண்டிருக்க அப்போது சரவணன் வண்டியில் வந்து இறங்கி நான் எப்பவும் பழைய சரவணன் தான், அதே பழைய செந்திலை உன்னிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் என சொல்லி வீட்டுக்கு கூப்பிட செந்திலும் மனம் மாறி வீட்டுக்குச் செல்கிறார்.

சரவணன் வெற்றியால் வீட்டை விட்டு கிளம்பிய செந்தில், சந்தியாவுக்கு நடந்த துப்பாக்கி சூடு - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

வீட்டில் மயிலு ஸ்வீட் செய்து கொடுக்க எல்லோரும் சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருக்க அப்போது சிவகாமி சந்தியாவிடம் பேச வேண்டும் என சொல்லி வீடியோ கால் போட சொல்ல பிறகு வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்கிறது.

செல்வம் சந்தியாவின் கையில் சுட சந்தியா கீழே சரிந்து விழுகிறார். பிறகு ஒரு பக்கம் எல்லோரும் பதறிப் போக மறு பக்கம் எல்லோரும் தீவிரவாதிகளை எதிர்த்து துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். பிறகு கௌரி மேடம் சந்தியா நீ ஒன்னும் பயப்படாத சின்ன காயம் தான் எல்லோரும் உன்கூட தான் இருக்கும் என சொல்லி அவரை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

சரவணன் வெற்றியால் வீட்டை விட்டு கிளம்பிய செந்தில், சந்தியாவுக்கு நடந்த துப்பாக்கி சூடு - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இதையெல்லாம் போனில் கேட்ட சிவகாசி எனக்கு உடனடியாக சந்தியாவை பார்க்கணும் நான் சென்னைக்கு கிளம்புறேன் யார் வந்தாலும் வரல நாளும் சரி நான் போறேன் என கிளம்புகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.