அர்ச்சனா மீது செந்திலுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சரவணன் வருத்தத்தால் சிவகாமி எடுக்கப் போகும் முடிவு என்ன என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா ஹால் டிக்கெட் வராத வருத்தத்தில் இருக்க அவருடைய மாமனார் வந்து எல்லாம் நல்லதாகவே நடக்கும் காபி குடிமா என சொல்ல இந்த நேரத்தில் எல்லோரும் ஒன்று கூடி இருக்கின்றனர். சந்தியாவை தேடி அவருடன் படித்த இரண்டு தோழிகள் வீட்டுக்கு வந்து எல்லோருக்கும் ஹால் டிக்கெட் வந்துடுச்சு உங்களுக்கு வரலையா? என கேட்க சந்தியா இன்னும் வரலை என கூறுகிறார். இந்த நேரத்தில் சரவணன் வீட்டுக்கு வந்து ஹால் டிக்கெட் வீட்டில் கொடுத்துட்டேன்னு சொல்றாங்க என கூறுகிறார்.

சரவணன் பேசிய பேச்சால் சிவகாமி எடுக்கப் போகும் முடிவு என்ன? அர்ச்சனா மீது வந்த சந்தேகம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு சந்தியா ரூமுக்குள் வருத்தத்தோடு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். சரவணன் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். இந்த நேரத்தில் சந்தியாவின் அண்ணா போன் போட்டு ஹால் டிக்கெட் குறித்து கேட்க உடனே சந்தியா ஹால் டிக்கெட் வராத விஷயத்தை சொல்லி கண்கலங்கி அழுகிறார். எல்லாம் நல்லதாகவே நடக்கும் ஒரு வேலை அப்படி ஹால் டிக்கெட் வரலைன்னா அடுத்த வருஷம் எக்ஸாம் எழுதிக்கலாம் அதுக்காக இன்னும் நிறைய படி என ஆறுதல் கூறுகின்றனர்.

சரவணன் பேசிய பேச்சால் சிவகாமி எடுக்கப் போகும் முடிவு என்ன? அர்ச்சனா மீது வந்த சந்தேகம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அர்ச்சனா ரூமுக்குள் டான்ஸ் ஆடி சந்தோஷமாக இருக்க அதனைப் பார்த்த செந்தில் ஹால் டிக்கெட் நீதான் எடுத்து ஒளிச்சு வச்சிருக்கியா என கேட்க அர்ச்சனா எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் சந்தியா எக்ஸாம் எழுதல நான் எனக்கு ரொம்ப சந்தோஷம் என கூறுகிறார். பிறகு சரவணன் தூங்காமல் காலில் வருத்தத்தோடு விளாத்திக் கொண்டிருக்க அப்போது வந்த சிவகாமி என்னை இன்னும் தூங்காமல் இருக்க என கேட்க சந்தியா ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சாங்க ஆனா அவங்க பரீட்சை எழுத முடியாமல் போன அது ரொம்ப கஷ்டமா இருக்கும் என கூறுகிறார். சரவணன் வருத்தப்பட்டு பேசுவதை பார்த்து சிவகாமியின் முகம் மாறுகிறது. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.