சந்தியா காணாமல் போக சரவணனை வார்த்தையால் கொன்றுள்ளார் அர்ச்சனா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் செந்தில் நான் முன்னேறதுல உங்களுக்கு சந்தோஷமே இல்லையா என கேட்க சிவகாமி நொறுங்கி போக சரவணன் அர்ச்சனா குடும்பத்திடம் மன்னிப்பு கேட்க அவர்கள் அங்கிருந்து கிளம்புகிறார்கள்.

காணாமல் போன சந்தியா‌‌.. சரவணனை வார்த்தையால் கொன்ற அர்ச்சனா - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்து சந்தியா பயிற்சிக்கு வராமல் போக கௌரி மேடம் ஜோதியிடம் விசாரிக்க பிறகு போன் போட சந்தியா மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப் என வருகிறது. அடுத்து சரவணனிடம் விஷயத்தை சொல்ல அவரும் போன் போட ஸ்விட்ச் ஆஃப் என வந்ததாக கூறுகிறார்.

காணாமல் போன சந்தியா‌‌.. சரவணனை வார்த்தையால் கொன்ற அர்ச்சனா - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இப்படியான நிலையில் அடுத்ததாக குழந்தை அழுது கொண்டே இருக்க செந்தில், ஜெஸ்ஸி ரூமுக்கு சென்று தூக்கி வர அர்ச்சனா இதை பார்த்து சண்டையிடுகிறார். ஆடு பகை குட்டி உறவா? எங்க மேல இருக்க வெறுப்புல என் குழந்தையை எதாவது பண்ணிடுவீங்களோனு பயமாக இருக்கு என பேசி சரவணனை வார்த்தையால் நோகடிக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.