சந்தியா சென்னைக்கு கிளம்ப சிவகாமி கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா சென்னைக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருக்க எல்லோரும் சந்தியாவை பாராட்டுகின்றனர். பிறகு சரவணன் ஒரு நிமிஷம் என உள்ளே சென்று அவளுக்காக வாங்கிய ஷூ வை கொண்டு வந்து கொடுக்க சந்தியா சந்தோஷப்படுகிறார்.

சென்னைக்கு கிளம்பும் சந்தியா.. அர்ச்சனா கொடுத்த ஷாக், சிவகாமி கொடுத்த கிஃப்ட் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு பார்வதி ஒரு நிமிஷம் என சந்தியாவுக்காக வாங்கிய பேண்ட் சட்டை எடுத்து வந்து கொடுக்கிறார். பிறகு ஆதி ஓடிச் சென்று ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை எடுத்து வந்து கிப்டாக கொடுக்கிறார். சரவணனின் அப்பா ரவி சந்தியாவுக்காக கோவிலில் பூஜை செய்து வாங்கி வந்த கயிறை கட்டி விடுகிறார்.

இப்படி எல்லாரும் கிப்ட் கொடுக்க மைலு சந்தியாவுக்காக வாட்டர் பாட்டில் ஒன்றை வாங்கி வந்து கிப்ட் கொடுக்கிறார். சக்கரை என்ன வாங்குவது என தெரியல அதனால சேர்த்து வைத்த காச உங்களுக்கு கொடுக்கிறேன் உங்களுக்கு புடிச்சது வாங்கிக்கோங்க என கூறுகிறார்.

பிறகு அர்ச்சனா உள்ளே சென்று உனக்காக நான் சத்து மாவு அரைச்சு வச்சேன் இந்த தினமும் கூறி என கொடுக்கிறார். இதனால் அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். பிறகு சந்தியாவை அழைத்துச் சென்று உட்கார வைத்து ஆளாளுக்கு ஒருவரை தின்பண்டத்தை கொடுத்து சாப்பிட வைக்கின்றனர். மயிலு நான் செஞ்ச இட்லி சாம்பார் சாப்பிடுங்க என ஊட்டி விடுகிறார்.

சென்னைக்கு கிளம்பும் சந்தியா.. அர்ச்சனா கொடுத்த ஷாக், சிவகாமி கொடுத்த கிஃப்ட் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு சென்னைக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருக்க அக்கம்பக்கத்தினர் வந்து சந்தியாவுக்கு வாழ்த்து சொல்லி செல்கின்றனர். பிறகு சிவகாமி இன்னும் ரெண்டு பேர் கிட்ட நீ ஆசிர்வாதம் வாங்கணும் என சொல்லி சந்தியாவின் அப்பா, அம்மா போட்டோவை கிப்டாக கொடுக்க சந்தியா கண்கலங்குகிறார். பிறகு சரவணன், சந்தியா, சிவகாமி சென்னைக்கு கிளம்புகின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.