
அர்ச்சனாவால் சந்தியாவுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தியா காபி போட்டு போய் சிவகாமி மற்றும் ரவிக்கு கொடுக்க அதை குடித்த சிவகாமி கருமம் என கீழே துப்ப அர்ச்சனா அது கருமம் இல்லாத காபி என சொல்ல இத குடிச்சா உடம்பு சரியில்லாம இருக்கவங்க கோமாவுக்கே போயிடுவாங்க என திட்டுகிறார். சந்தியா இது எப்படி நடந்துச்சுன்னு தெரியல நான் வேணும்னா வேற காபி போட்டு கொண்டு வரேன் என சொல்ல சிவகாமி வேண்டாம் என மறுத்து விடுகிறார்.

அடுத்து சிவகாமி துணி காய வைத்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் அர்ச்சனா எல்லாரும் அவங்கவங்க வேலையை பார்த்துக்கிட்டு போயிடுவாங்க நீங்க மட்டும் தான் கஷ்டப்படுவீங்க, எல்லாரையும் அவங்க அவங்க வேலையை அவர்களே பார்க்க சொல்லுங்க என சொல்ல சிவகாமி இந்த வீட்டில இதுக்கு முன்னாடி எப்படி இருந்ததோ அதே மாதிரி தான் இப்பவும் இருக்கும், எல்லாரும் எல்லா வேலையும் பங்கு போட்டு தான் செய்யணும் என சொல்லிவிட்டு போகிறார்.
மறுபக்கம் சரவணன் கடையில் இருக்க அங்கு வரும் கவிதா சரவணனை ஏளனமாக பேசுகிறார், நல்லவேளை எங்க அப்பா பேச்சைக் கேட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்காம ஓடி போயிட்டேன் என சொல்கிறார். உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா இல்லையா ஆகலைன்னா ஏதாச்சு ஊர்ல இருக்கேன் ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ என நக்கல் அடித்து விட்டு செல்கிறார்.

அதன் பிறகு ஆதி சந்தியாவின் யூனிபார்மை அயன் செய்து வைக்க சந்தியா எனக்காக இதெல்லாம் பண்ணாத ஜெஸ்ஸியை நல்லவிதமா பாத்துக்கிட்டாலே போதும் நீ மாறி இருப்பேன்னு நம்புறேன் என பல்பு கொடுக்கிறார். பிறகு சந்தியாவின் பாதுகாப்புக்காக காவலர் ஒருவர் வெளியில் பெரிய துப்பாக்கியுடன் இருக்கேன் அதை பார்த்த அர்ச்சனா மயிலுவிடம் சந்தியாவை விட இவர் பெரிய போலீஸ் என சொல்ல மயிலு உள்ளே சென்று உங்களை விட மேலதிகாரி ஒருத்தர் வந்து வெளியே காத்துக்கொண்டிருக்கிறார் என சொல்கிறார்.
வெளியில் சென்று பார்த்த சந்தியா சிரித்துவிட்டு இவரு மேலதிகாரினு யார் சொன்னது என கேட்க மயிலு அர்ச்சனாவை கை காட்டுகிறார். அவர் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்குன்னு காவலுக்கு வந்து நின்னுகிட்டு இருக்காரு என சொல்ல சிவகாமி உட்பட எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு போலீஸ் உடையில் சந்தியா கெத்தாக தயாராகி நிற்க அங்கு வரும் சரவணன் அவரது அப்பா, அம்மா போட்டோவை கிப்டாக கொடுக்க அதைப் பார்த்து கண் கலங்க சரவணன் சமாதானம் செய்து வேலைக்கு கிளம்ப வைக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.