டைட்டிலை வென்ற சரவணனை ஊர் மக்கள் கொண்டாட பொறாமையில் அர்ச்சனா சபதம் ஒன்றை எடுத்துள்ளார்.

Raja Rani 2 Episode Update 05.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. கிரேட் இந்தியன் கிச்சன் காம்பினேஷனில் இரண்டாவது ரன்னர் சல்மா என தேர்வு செய்யப்படுகிறார்.

டைட்டிலை வென்ற சரவணனை கொண்டாடிய ஊர் மக்கள்.. பொறாமையில் அர்ச்சனா எடுத்த சபதம் - ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் அப்டேட்

அதன்பிறகு டைட்டில் வின்னர் சரவணன் என அறிவிக்கப்பட அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். அர்ச்சனாவும் ஆதியும் அதிர்ச்சி அடைந்தனர். வெளிநாட்டு நடுவர் சரவணனை பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து கோப்பையை கையில் கொடுத்தார். பிறகு அனைவரும் சரவணனுக்கு வாழ்த்து கூறினர்.

பிறகு சரவணனை இரண்டு வார்த்தைகள் பேசுமாறு சொல்ல அவர் என்னுடைய இந்த வெற்றிக்குக் காரணம் என்னுடைய மனைவியும் அம்மாவும் தான் என கூறி அவர்களை மேடைக்கு வரவழைத்து நன்றி தெரிவித்தார். நடுவர்கள் அவரது குடும்பத்தார் என்னை பாராட்டினர். பிறகு சிவகாமியிடம் தொகுப்பாளர் கேள்வி கேட்க அவர் பேசுவதற்கு வெட்கப்பட்டார். பிறகு ஒருவழியாக சிவகாமி பேசத் தொடங்கியதும் தன்னுடைய மருமகள் சந்தியா தான் இது அனைத்திற்கும் காரணம். என்னுடைய மகனை புது மனுஷனாக என்னிடம் திருப்பிக் கொடுத்துள்ளார். என் சந்தியாவுக்கு நன்றி சொல்ல பிறகு சந்தியா பேசும் போது இவை அனைத்திற்கும் காரணம் என்னுடைய அத்தை தான் என அவர் பதிலுக்கு புகழ்ந்து பேசினார்.

பிறகு மோகன் வைத்தியா பேசும்போது ஒரு நல்ல சமையல் கலைஞரை தேர்ந்தெடுப்பதுதான் இந்த நிகழ்ச்சி ஆனால் தற்போது நல்ல குடும்பத்தை தேர்வு செய்துள்ளோம் என கூறினார். அதன் பிறகு சரவணன் 5 லட்சம் ரூபாய் காசோலை பரிசாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது அர்ச்சனா அதிர்ச்சியானார். 5 லட்சம் ரூபாய் பரிசா என புலம்பினார்.

டைட்டிலை வென்ற சரவணனை கொண்டாடிய ஊர் மக்கள்.. பொறாமையில் அர்ச்சனா எடுத்த சபதம் - ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் அப்டேட்

அதன் பின்னர் ஊருக்கு வந்த சரவணனுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. மேளதாளத்துடன் மாலை அணிவித்து மரியாதை கொடுத்து அவரை வரவேற்றனர். ஊர்மக்கள் சரவணனையும் அவருக்கு ஆதரவாக இருந்த சந்தியா சிவகாமியையும் பாராட்டினர். வீட்டுக்கு வந்ததும் அவருக்கு மயிலு ஆரத்தி எடுக்க சிவகாமி நான்தான் எடுப்பேன் என ஆரத்தி தட்டை வாங்க ஊரு கண்ணு முழுக்க உங்க ரெண்டு பேர் நல்லாத்தான் இருக்கு நான் தான் ஆரத்தி எடுப்பேன் என சந்தியா சிவகாமி மற்றும் சரவணனுக்கு ஆரத்தி எடுக்கிறார். பிறகு அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல அர்ச்சனா என யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒப்புக்குச் சப்பாணியாக என்னை ஓரம் இருக்கி வேடிக்கை பார்க்கிறார்கள் என மனதுக்குள் புலம்புகிறார்.

உன்னைப் புகழ்ந்து பேசிய அத்தையோட இதே வாயால் வெளியே போடினு சொல்ல வைக்கிறேன். இல்லனா நான் அர்ச்சனா அது இல்லை என சபதம் எடுக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.