பாஸ்கரின் அம்மா கையில் போட்டோ கிடைக்க கல்யாணமே நின்று போவது போல பார்வதி நினைத்து பார்க்கிறார்.

Raja Rani 2 Episode Update 03.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பார்வதி விக்கி கொடுக்கும் டார்ச்சரால் பயந்து போய் இருக்கிறார். ஆதி விக்கி கொடுத்த கிப்ட் ஐ பார்வதியிடம் கொடுக்க கொண்டு வருகிறார். இந்த நேரத்தில் பாஸ்கர் வழிமறித்து இதை பார்வதியிடம் நான் கொடுத்து விடுவேன் என சொந்த நாடு கொடுத்துவிடுகிறேன் நீங்க எப்படியாவது ரிஸ்க் எடுத்து பார்வதியைப் பார்த்துக்கோங்க என சொல்ல பிறகு இருவரும் பார்வதி ரூமுக்கு வருகின்றனர். அதற்குள் விக்கி போன் செய்தேன் உனக்கு ஒரு கிப்ட் அனுப்பி இருக்கேன் என கூறுகிறார். அதில் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என சொல்கிறார்.

பாஸ்கரின் அம்மா கையில் கிடைத்த போட்டோ.. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட், தற்கொலைக்கு முயலும் பார்வதி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

கிப்ட் ஒரு ரூமுக்கு வந்த ஆதி அதை பாஸ்கரிடம் கொடுத்து விட்டு சென்று விடுகிறார். பாஸ்கர் பிரித்து என்ன இருக்கு என பார்க்கலாம் என்று சொல்லி பிரிக்க முயற்சி செய்ய அதற்குள் அவருடைய அம்மா வந்து இங்கே என்ன பண்ற ரூமுக்கு போய் மாப்பிள்ளையா லட்சணமா இரு என அனுப்பி வைக்கிறார். பிறகு பாஸ்கரின் அம்மா யார் கொடுத்த கிப்ட் பிரிச்சி பார்க்கலாம் என சொல்ல பார்வதி இல்லை சர்ப்ரைஸ் கிப்ட் நாளைக்குதான் பிடிச்சுப் பார்க்கணும்னு என் ப்ரண்டு சொன்னா என கூறுகிறார். அப்படி என்ன சர்ப்ரைஸ் என பிரித்துப் பார்த்து அதில் விட்டில் பார்வதியின் இருக்கும் போட்டோக்களை பார்த்து கல்யாணத்தையே நிறுத்துவது போலவும் பார்வதியின் அப்பா காலில் விழுந்து கெஞ்சியும் அதைக் கேட்காமல் கல்யாணத்தை நிறுத்தியது போல நினைத்து பார்க்கிறார்.

இந்த நேரத்தில் விக்கி போன் செய்ய பாஸ்கரின் அம்மா போன் அடிக்குது என்ன பார்வதியுடன் சொல்ல அப்போதுதான் அவர் சுய நினைவிற்கு வருகிறார். பிறகு சரி நீயே பிரிச்சி பார்த்துக்க என கிளம்பிவிடுகிறார் பாஸ்கரின் அம்மா. பிறகு விக்கி மீண்டும் போன் செய்து பார்வதியை மிரட்டுகிறார். பிறகு யாரோ ஒருவர் கதவை தட்ட பார்வதி திறந்து பார்க்க அவருடைய சித்தி அம்மா உன்னோட படுத்துக சொன்னாங்க படுத்து தூங்கலாம் என சொல்ல பார்ப்பது இல்லை எனக்கு தனியாக படுத்தால் தான் தூக்கம் வரும். நான் அம்மாவிடம் சொல்கிறேன் என சொல்லி அவரை அனுப்பி வைக்கிறார்.

பாஸ்கரின் அம்மா கையில் கிடைத்த போட்டோ.. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட், தற்கொலைக்கு முயலும் பார்வதி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு கதவை சாத்திய பிறகு மீண்டும் விக்கி போன் செய்து எனக்கு கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு இப்போ உன் மாமியார் ரூமுக்கு தான் போய்கிட்டு இருக்கேன் என சொல்ல வேண்டாம் வீட்டில் நான் வருகிறேன் என பார்வதி சொல்கிறார். அப்படி வா வழிக்கு உனக்காக ஆசையா காத்துகிட்டு இருக்கேன் என சொல்லி போனை வைக்கிறார். என்னால ரெண்டு குடும்பமும் அசிங்கப்படுவதை பார்க்க முடியாது நான் இருந்தால் தானே இந்த பிரச்சனை என தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். ‌‌‌‌‌

இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌ ‌‌