ச்ராவணனை நினைத்து சிவகாமி கண் கலங்க அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார் சந்தியா.

Raja Rani 2 Episode Update 02.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சந்தியா சரவணன் சென்னைக்கு கிளம்ப துணிகளை எடுத்து வைக்கிறார். தனியா போக போர் அடிக்குது என சரவணன் சொல்கிறார். சக்கரையை உங்களோட அனுப்பி வைக்கட்டுமா என சந்தியா சொல்கிறார். அத்தை, மாமா யாரையாச்சும் அனுப்பி வைக்கட்டுமா என கேட்க நீங்க வாங்க நான் அம்மா கிட்ட பேசுறேன். நீங்க வந்தா எனக்கு தைரியமா இருக்கும் என சொல்கிறார். நீங்க தானே எல்லாத்துக்கும் காரணம், நீங்க தான் வரணும் என சரவணன் கூறுகிறார்.

சரவணனை நினைத்து கண் கலங்கும் சிவகாமி.. கிண்டலடிக்கும் ஆதி.. சந்தியா கொடுத்த வாக்குறுதி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்
உலக குத்துச்சண்டை : இந்திய வீரர்கள் முன்னேற்றம்..

உங்க கூட வந்தா அத்தை புருஷன் கூட ஜாலியா ஜோடி போட்டுட்டு சுத்த கிளம்பிட்டியானு கேட்பாங்க நான் வரல என சொல்கிறார். சரவணன் நீங்க வந்து தான் ஆகணும்னு சந்தியாவின் துணியை எடுத்து வைக்கிறார். அப்போ தான் தெரிகிறது சந்தியா அவரது துணியையும் சேர்த்து எடுத்து வைத்திருக்கார் என்று. இவ்வளவு நேரம் ஒரு பச்ச பண்ணை கதற விட்டுட்டு இருக்கீங்க, ஏன் என சரவணன் கேட்க என் புருஷன் ஜெயிக்கிறத நான் பக்கத்துல இருந்து பாக்க வேணாவா என சந்தியா சொல்ல, சரவணன் வேணா வேணா நான் சக்கர, இல்லனா அம்மாவை கூட்டிட்டு போறேன் என கூறுகிறார், நீங்க வீட்லயே இருங்க என சொல்ல நான் வருவேன் என நீங்க மட்டும் ஜாலியா ஊர் சுத்தலாம்னு பாக்கறீங்களா என சொல்கிறார். அப்படியே இருவருக்கும் ரொமான்ஸ்.

இந்த பக்கம் அர்ச்சனா செந்திலிடம் இந்த நாலு செவுத்து குள்ள தான் என் வாழ்க்கையே இருக்க போகுது என புலம்புகிறார். சந்தியா ஐடியாவா பேசி எப்படி அத்தையே ஓகே சொல்ல வச்சிட்டா. நாமளும் தான் சண்டை போட்டு சேர்ந்து சினிமாவுக்கு போயிட்டு வந்தோம் என கூறுகிறார். அர்ச்சனா புலம்பலை கேட்டு வெளியே போனா தான் ஹனிமூனா, இங்கயே கொண்டாடலாம் என செந்தில் கையை புடிக்க அர்ச்சனா அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை என கூறுகிறார்.

சிவகாமி சரவணனுக்காக பலகாரங்களை எடுத்து வைத்து கொண்டிருக்கிறார். அனைவரும் வீட்டில் ஒன்று சேர்ந்து விட ஆதி அண்ணனும் அண்ணியும் ஊரமூட்டு காசுல சென்னையை சுத்தி பாத்துட்டு வர போறாங்க என சொல்ல சிவகாமி அவன் உழைச்ச காசுல ஊரை சுத்துனவன் தானே நீ என ஆதியை திட்டி விடுகிறார். ஏதாச்சும் தேவைன்னா மட்டும் அண்ணன் கால்ல விழுவான் என பார்வதி கூற நீ பேசாத, கையில என்ன லிஸ்டு தானே நீயும் அண்ணன் கால்ல தானே விழுற என கூற நான் உரிமையா கேட்பேன், உன்னை மாதிரி தேவைன்னா காலை பிடிக்கிறதும் பின்னாடி கழுத்தை பிடிக்கிறதும் என் குணம் இல்ல என கூறுகிறார். செந்தில் இருவரையும் அமைதியா இருக்க சொல்கிறார். அர்ச்சனா மனதுக்குள்ளேயே புலம்பி கொள்கிறார்.

சந்தியா வந்ததும் பார்வதி லிஸ்டை கொடுக்கிறார். சரவணன் டென்ஷனா வந்து உட்கார சிவகாமி பலகாரம் வைத்து இருப்பதா சொல்கிறார். பின்னர் சந்தியா கூப்பிட சரவணன் உள்ளே செல்கிறார். கடை வேலையெல்லாம் முடிந்ததா என கேட்க முடிந்தது என சரவணன் சொல்கிறார். உங்களுக்கு ஒரு விசியம் காட்டவா என சென்னை மேப்பை எடுத்து காட்டுகிறார் சந்தியா. சென்னை பற்றி சந்தியா சரவணனிடம் சொல்லி கொண்டிருக்கிறார். சக்கர வந்து சென்னையை ஏன் சில பேர் மெட்றாஸ்னு சொல்றாங்க என கேட்க சந்தியா விளக்கம் கொடுக்கிறார்.

Mask போடலான 60,000 ரூபாய் Fine🤣 – Actress Mirnalini Ravi Fun Fill Interview | Enemy Movie

அந்த ஊருல திங்குறதுக்கு என்ன பேமஸ் என சக்கர கேட்க கடல் உணவுகள், பிரியாணி என வரிசை காட்டுகிறார் சந்தியா. இந்த நேரத்தில் சிவகாமி உள்ளே வந்து நேரத்துக்கு தூங்கு என சொல்கிறார். சரவணன் கடை வரைக்கும் சென்று வருவதாக கூறி விட்டு வெளியே செல்கிறார். அத்தை முகத்துல ஏதோ கவலை தெரியுதே என சந்தியா யோசிக்கிறார். பின்னர் சிவகாமி பூஜையறையில் நின்று கண் கலங்குகிறார். சந்தியா ஆறுதல் கூறுகிறார். நீங்க சப்போர்ட் பண்ணா அவர் கண்டிப்பா ஜெயிப்பார் என கூறுகிறார்.

சரவணனை எந்த போட்டியிலும் கலந்துக்க வேணான்னு தான் சொல்லுவேன், சரவணன் ஓட்ட பந்தயத்துல கலந்துக்கிட்டான், அவன் கனவுல தோத்து போகுற மாதிரி கனவு வந்துடுச்சு. மறுநாள் அந்த போட்டியில சரவணன் ஓடவே இல்லை. அப்படியே நின்னுட்டான். சரவணன் ரொம்ப கஷ்டப்பட்டான். அந்த மாதிரி என் புள்ளையை பாக்குற தைரியம் எனக்கு இல்ல என கூறுகிறார். கண் கலங்குகிறார். சந்தியா அழாதீங்க அத்தை என சொல்கிறார். அதனால தான் அவனை போட்டியில கலந்துக்க வேணான்னு சொல்றேன் என கூறுகிறார்.

அவர் பக்குவம் இல்லாத 10 வயசு பையன் இல்ல, அவர் திறமைசாலி. அவர் மீது எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை இருக்குல்ல. போட்டி பொறாமைன்னு எல்லாத்தையும் ஜெயித்து தான் இந்த இடத்துல இருக்காரு. அவருக்கு இப்போ நல்ல அனுபவம் இருக்கு அத்தை. அவர் உங்களுக்காக தான் பயப்படுகிறார் என கூறுகிறார். அவன் கஷ்டப்பட கூடாது என சொல்கிறார். உங்க புள்ளைய இன்னும் அதிக நம்பிக்கையோட உங்க கிட்ட ஒப்படைக்க வேண்டியது என்னோட பொறுப்பு என சொல்கிறார். என் புள்ளைய பத்திரமா பார்த்துக்கோ ம என கூறுகிறார் சிவகாமி. அவரை நான் நீங்க பெருமைப்படுற மாதிரி கூட்டிட்டு வருவேனா என கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்.