சந்தியாவுக்கு கௌரி மேடம் பனிஷ்மென்ட் கொடுக்க மறுப்பக்கம் சிவகாமி தேர்தல் விஷயத்தில் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சந்தியா கௌரி மேடம் சொன்ன வார்த்தையை மீறியதால் அவருக்கு பனிஷ்மென்ட் இருக்கு என சொல்கிறார். உங்கள காப்பாற்றுவதற்காக தான் நான் அப்படி செய்தேன் என சொல்ல அதெல்லாம் எனக்கு தெரியாது என கௌரி மேடம் கூறுகிறார்.

சந்தியாவுக்கு கௌரி மேடம் கொடுத்த பனிஷ்மென்ட்.. சிவகாமி எடுத்த முடிவு - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

உனக்கு இந்த பனிஷ்மென்ட் இல்லாம இருக்கணும்னா நீ இந்த ஐந்து டார்கெட்டையும் சரியா சொல்லணும் என டாஸ்க் கொடுக்க சந்தியா அதிர்ச்சி அடைகிறார். இதுல ஒரு டார்கெட் தவறினாலும் நீயும் அப்துலும் இந்த கேம்ப விட்டு வெளியே தான் போகணும் என கூறுகிறார். அதன் பிறகு சந்தியா அனைத்து டார்கெட்டையும் சரியாக முடிக்க பனிஷ்மென்ட் இல்லாமல் தப்பிக்கிறார்.

மறுபக்கம் சிவகாமி கடைவீதிக்கு சென்று வரும்போது அக்கம் பக்கத்தினர் சிலர் இப்படி ஒற்றுமையாய் இருந்த உன் குடும்பம் தேர்தல்ல இப்படி நேருக்கு நேரா போட்டி போடுதை பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இன்னும் தேர்தல் முடிவு வந்தால் என்ன நடக்குமோ என சொல்லு சிவகாமி அதே பயத்துடன் வீட்டுக்கு வந்து சரவணன் செந்திலை அழைத்து நீங்க என்ன வேணா பண்ணுங்க ஆனா தேர்தல் விஷயங்கள் எல்லாம் இந்த வீட்டுக்கு வெளியே விட்டுவிட்டு வந்துடனும். இந்த வீட்டில நீங்க எப்பவும் போல ஒற்றுமையான அண்ணன் தம்பியா மட்டும் தான் இருக்கணும், அதை மீறி ஏதாவது செஞ்சீங்கன்னா நான் மனுஷியாக இருக்க மாட்டேன் என எச்சரிக்கிறார்.

சந்தியாவுக்கு கௌரி மேடம் கொடுத்த பனிஷ்மென்ட்.. சிவகாமி எடுத்த முடிவு - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்து கௌரி மேடம் ஒரு மெசேஜ் வருகிறது. அதில் கேம்பை சுற்றி சமூக விரோதிகள் நடமாட்டம் இருப்பதாக தெரியவர கௌரி மேடம் அனைவரையும் எச்சரிக்கையாக இருக்க சொல்கிறார். பிறகு இரவில் சந்தியா சரவணனுடன் போனில் பேசிக் கொண்டிருக்க திடீரென ஏதோ ஒரு விசில் சத்தம் கேட்க சந்தியா விளக்கு எடுத்துக் கொண்டு காட்டுக்குள் தனியாக செல்கிறார்.

அங்கே மனிதர்கள் காலடியை பார்க்கிறார் பக்கத்தில் ஒரு லெட்டர் இருக்கிறது. அதில் நீங்கள் நினைத்ததை தைரியமாக செய்யுங்கள் என எழுதி இருக்க சந்தியாவுக்கு சந்தேகம் வருகிறது. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.