பார்வதியை கண்டுபிடித்துள்ளார் சந்தியா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோட்டில் சந்தியா, சரவணன், செந்தில் என மூவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக பார்வதியை தேடுகின்றனர். ஆனால் பார்வதியை என்றும் கிடைக்காத காரணத்தினால் சரவணன் கண்ணீர் விட்டு அழுதார்.

பார்வதியை கண்டுபிடித்த சந்தியா.. செல்வத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்தப் பக்கம் சிவகாமி மற்றும் குடும்பத்தினர் மற்றவர்கள் எல்லோரும் ஒன்றாக கோவிலுக்குள் செல்கின்றனர். கோவிலுக்குள் செல்லும் போது சர்க்கரையின் உடம்பில் வெடிகுண்டு இருப்பதால் அலார மணி அடிக்கிறது. ஆனால் கையில் ரிமோட் கார் இருந்ததால் அவரால் தான் மணி அடித்தது என நினைத்துக்கொண்டு போலீஸ் உள்ளே அனுப்பி வைத்துவிடுகின்றனர். பிளான் ஏ வெற்றிகரமாக முடிந்துவிட்டது என செல்வம் சந்தோஷப்படுகிறார்.

பார்வதி தன்னுடைய வீட்டார்களை பார்த்து அவர்களை நெருங்க முடியாமல் கூட இருப்பவர்கள் தடுத்து சுற்றிச் சுற்றி வருகின்றனர். ஒரு கட்டத்தில் பார்வதி மயங்கி விழ அவரது காலில் இருந்த கொலுசு பார்த்து இது பாஸ்கர் வாங்கிக் கொடுத்தது என கண்டுபிடித்து பார்வதி என ஓடுகிறார் சந்தியா. சந்தியா ஓடி வருவதைப் பார்த்ததும் பக்கத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடி விடுகின்றனர்.

பிறகு சந்தியா போலீஸ் அழைத்து போலீசார் உதவியுடன் பார்வதியை மீட்கிறார். ஆனால் பார்வதி யாரும் கிட்ட வர வேண்டாம் என கூறுவதால் பொடி செய்து தவறாக இருக்கிறது கூட்டம் அனைத்தும் இங்கேதான் இருக்கிறது இப்போதைக்கு இவரை இங்கிருந்தே தனியாக அழைத்துச் செல்ல வேண்டும் என பார்வதியை அழைத்து செல்கின்றனர். பிறகு அவரின் உடலில் உள்ள மனித வெடிகுண்டை அப்புறப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் வர வைக்கப்படுகின்றனர்.

பார்வதியை கண்டுபிடித்த சந்தியா.. செல்வத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பயமாக இருக்கிறது என பதட்டப்பட சந்தியா பயப்படாத பார்வதி, இந்த கடவுள் முன் பல காப்பாற்றுவார் என ஆறுதல் கூறுகிறார். பார்வதி உடலில் வெடிகுண்டை பார்த்ததும் சந்தியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.