Raj Kiran in Suriya 40

சூடுபிடிக்கும் சூர்யா 40. 20 வருடங்களுக்குப் பிறகு சூர்யாவுடன் பிரபல நடிகர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Raj Kiran in Suriya 40 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூர்யா 40, வாடிவாசல் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

சூர்யா 40 திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. பக்கா கிராமத்து கதையாக உருவாக உள்ள இந்த படத்தில் இன்னும் 2 கதாபாத்திரங்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் அதன்பின்னர் படத்தை பற்றிய அப்டேட்ஸ் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது அந்த இரண்டு கதாபாத்திரங்களில் ஒன்றாக பழம்பெரும் நடிகர் ராஜ் கிரண் தேர்வாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதைப்போல் ராஜ்கிரணுக்கு இந்த படம் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும், அவருடைய மார்க்கெட்டை இந்தப்படம் தூக்கி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ்கிரன் மற்றும் சூர்யா இருவரும் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். இதற்கு முன்னதாக இவர்கள் பாலா இயக்கத்தில் வெளிவந்த நந்தா படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.