காதலரை நெஞ்சோடு இழுத்து அணைத்தபடி ரைசா வில்சன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Raiza Wilson With Boy Friend : தமிழ் சினிமாவில் மாடலிங் துறையை சார்ந்த நடிகையாக வலம் வருபவர் ரைசா வில்சன். வேலையில்லா பட்டதாரி 2, வர்மா போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றார். அதன் பின்னர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேம காதல் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். மாடலிங் நடிகை என்பதால் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வழக்கமாகக் கொண்டார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய காதலர் இழுத்து நெஞ்சோடு அணைத்தபடி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

காதலரை நெஞ்சோடு அணைத்தபடி ரைசா வில்சன் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்