Raiza Wilson Reply to Fans

வீங்கிய முகம் சரியானது எப்படி என ரைசா விளக்கம் அளித்துள்ளார்.

Raiza Wilson Reply to Fans : தமிழ் சினிமாவில் மாடலிங் துறையை சார்ந்த நடிகையாக வலம் வருபவர் ரைசா வில்சன். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

அதன் பின்னர் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பியார் பிரேம காதல் என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வீங்கிய முகத்துடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அழகு நிபுணர் ஒருவரால் தனக்கு இப்படி நடந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இவன் சரியாகி பழையபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட ரசிகர்கள் வீங்கிய முகத்தை சரி செய்தது எப்படி என பலரும் கேட்டிருந்தனர். தோல் மருத்துவரிடம் 5 வாரங்கள் சிகிச்சை பெற்றதாக ரைசா வில்சன் விளக்கம் அளித்துள்ளார்.