Raina Speech :
Raina Speech :

Raina Speech : சென்ற போட்டியில் தோனி பங்கு பெறவில்லை இதை தொடர்ந்து அவரின் உடல் நிலை மற்றும் போட்டியில் பங்கு பெறுவது பற்றி ரெய்னா பேட்டி அளித்து உள்ளார்.

”தோனி நன்றாக உள்ளார், அடுத்த போட்டியில் விளையாடுவார் எனத் தெரிகிறது,” என சென்னை வீரர் ரெய்னா தெரிவித்தார்.

இந்தியாவில் 12வது சீசன் பிரிமியர் தொடர் நடக்கிறது. இதில் மூன்று முறை கோப்பை வென்ற அணி சென்னை.

நடப்பு சாம்பியனான இந்த அணி முதல் 8 போட்டியில் 7ல் வென்றது. 9வது போட்டியில் முகுதுப்பகுதியில் ஏற்பட்ட பிடிப்ப காரணமாக கேப்டன் தோனி களமிறங்கவில்லை. இவருக்குப் பதில் ரெய்னா பொறுப்பேற்றார்.

இப்போட்டியில் வழக்கத்துக்கு மாறாக வாட்சன், டுபிளசி ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது.

இருப்பினும் பின் வந்த வீரர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ரெய்னா, கேதர் ஜாதவ், பில்லிங்ஸ் ஏமாற்றினர்.

அம்பதி ராயுடு, ஜடேஜா இணைந்து மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 20 ஓவரில் 132 ரன்கள் மட்டும் எடுத்தது சென்னை.

அடுத்து பவுலிங்கில் சகார், ஷர்துல் தாகூர் ரன்களை வாரி வழங்க, ஐதராபாத் எளிதாக வென்றது. தோனி இல்லாத நிலையில் கேப்டன் பணியில் ரெய்னா தடுமாறினார்.

ரெய்னா கேப்டனாக களமிறங்கிய 4 போட்டிகளில் சென்னை அணி மூன்றாவது தோல்வியை பதிவு செய்தது.

இதனிடையே அடுத்து 21ம் தேதி பெங்களூரு போட்டியிலும் தோனி களமிறங்குவாரா என சந்தேகமாக உள்ளது.

உலக கோப்பை தொடர் வரவுள்ள நிலையில் தோனி நன்றாக ‘ரெஸ்ட்’ எடுப்பார் என நம்பப்படுகிறது.

இதுகுறித்து சென்னை அணியின் தற்காலிக கேப்டன் ரெய்னா கூறியது:

ஐதராபாத் போட்டியில் போதியளவு ஸ்கோர் எடுக்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம்.

சிறப்பான முறையில் ‘பார்ட்னர்ஷிப்’ அமைக்க திட்டமிட்டோம். இதற்குத் தகுந்து வீரர்கள் விளையாடி இருக்க வேண்டும்.

இன்னும் ஒரு 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். இதனால் போட்டியை பறிகொடுக்க நேரிட்டது.

தோனி முகுகுப் பகுதி பிடிப்பு காரணமாக ஐதராபாத் போட்டியில் பங்கேற்கவில்லை. தற்போது நன்றாக உள்ளார். அடுத்த போட்டியில் களமிறங்கி விளையாடுவார் என நம்பப்படுகிறது. இவ்வாறு ரெய்னா கூறினார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.