Rain Season Disease

Rainy Season Disease :

* மழைக்காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்றுக்கு ஆளாவார்கள்.

* சாதாரண சளியில் தொடங்கி உயிரை பறிக்கும் டெங்கு வரை மழைக்காலங்களில்தான் பரவுகிறது.

* மழைக்காலங்களில் தன் உடலையும் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

* குளிர்பானம் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

* மழைக்காலங்களில் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

* நன்கு தேய்த்து குளிக்கும் போது நம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும்.

* ஆடைகளை நன்றாக துவைத்து உலர்த்தி பின் அணியலாம்.

* மழைக்காலங்களில்தான் “மெட்ராஸ் ஐ” என்றழைக்கப்படும் கண் நோய் பரவுகிறது. இது” அடினோ வைரஸ்” என்னும் வைரஸால் ஏற்படுகிறது.

* நன்கு கொதிக்க வைத்த நீரைப் பருகவும்.

* பழங்களில் மாதுளை, பப்பாளி, ஆப்பிள், அன்னாசி, பேரிக்காய், ஆரஞ்சு போன்ற பழங்களை எடுத்துக்கொள்ளலாம். “வைட்டமின் C” நிறைந்த பழங்கள் ஆகும .இவை நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கிறது.

*சூப், கிரீன் டீ, சூடாக சமைத்த சத்துமாவு கஞ்சி, பால், டீ, காபி என திரவ உணவுகளை உண்ணலாம்.

*சளி, தும்மல் ஏற்படும் போது கர்சீப் பயன்படுத்தவேண்டும். அடிக்கடி ஆவி பிடித்தல் நல்லது.

*சளி ஏற்படும் போதும், தொண்டையில் தொற்று ஏற்படும் போதும் சூடான நீரில் உப்பை போட்டு வாயை கொப்பளித்தால் சற்று பலன் தரும்.

*மழைக்காலங்களில் டைபாய்ட், பன்றிக்காய்ச்சல், டெங்கு இன்புளுயன்சா, போன்ற நோய்கள் உருவாகக்கூடும்.

*இவற்றிலிருந்து தப்பிக்க நாம் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த பழங்களையும், உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் நிலவேம்பு குடிநீரை வாரம் 3 முறை பயன்படுத்தலாம்.

* நார்ச் சத்து, புரதச்சத்து, மாவு சத்து, விட்டமின்கள் நிறைந்த சரிவிகித உணவை உட்கொள்வது அவசியம்.

* மழைக்காலங்களில் உருவாகும் கொசுக்களை தவிர்க்க “நொச்சி இலைகளை” பயன்படுத்தலாம்.

* குழந்தைகள் முதல் பெரியவர் வரை மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை மேற்கொள்வது அவசியமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here