Rain likely to continue in Chennai for 24 hours
Rain likely to continue in Chennai for 24 hours

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, அடுத்த 24 மணி நேரதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் மேலும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குமரி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி திருவண்ணாமலை, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், தென் தமிழக கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதி மற்றும் மாலத்தீவு, லட்சத் தீவுப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவனந்தபுரத்திற்கு தென்மேற்கே 220 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரதத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் போரூர், வளசரவாக்கம், அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, மீனம்பாக்கம் மற்றும் பல்வேறு புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 18 செ.மீ., மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.