Rain Latest Update
Rain Latest Update

Rain Latest Update – சென்னை: வங்கக்கடலில் உருவான கஜா புயல், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தி சென்றது.

இதன் பின்னர் தமிழகத்தின் மேல்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வந்தது.

இப்படியாக தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்து கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவி வருகிறது.

இந்த நிலைமை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வருகின்ற நவம்பர் 30- ஆம் தேதியும், டிசம்பர் 1- ஆம் தேதியும் தமிழக கடலோர பகுதிகளில்,

ஒருசில இடங்களில் பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கஜா புயல் வந்த சுவடே இன்னும் மறையவில்லை, இந்நிலையில் மேலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்ற வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பை கேட்டு தமிழக மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

கஜா புயலால் பாதிக்கபட்ட பகுதிகளை சீரமைத்து வரும் தமிழக அரசு இந்த அறிவிப்பை அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.