Rain continue in Vadachennai
Rain continue in Vadachennai

Rain continue in Vadachennai -சென்னை: ‘தென்கிழக்கு வங்கக் கடலில் உள்ள மாலத்தீவை ஒட்டி, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு, கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக’ சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் அருகே, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது என்றும், இதனால் வரும் டிசம். 6-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வானது, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, “வரும் டிசம். 4- ஆம் தேதி முதல் 6- ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் பரவலாக மழை பெய்யும் ” என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் வடகிழக்கு பருவமழையானது வழக்கத்தை விட 49 சதவீதம் அளவுக்கு இம்முறை குறைவாகவே பெய்துள்ளது.

இதேபோன்று, காஞ்சிபுரத்தில் 26 சதவீதமும், திருவள்ளூர் மாவட்டத்தில் 38 சதவீதம் அளவு குறைவான மழையே பதிவாகியுள்ளது! குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னை மற்றும் வட தமிழக பகுதிகளை பொறுத்தவரையில், பருவமழையானது பிற்பகுதியில் கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பருவமழையானது வழக்கத்தை விட இம்முறை அனைத்து இடங்களிலும் குறைவாகவே காணப்படுகிறது.