
RailWay Ticket : 2016- ஆம் ஆண்டுகளில் ரயில்வே துறை ” ஃப்ளெக்சி பேர்” என்ற பெயரில் சிறப்பு கட்டணத்தை ராஜதானி, துரந்தோ, சதாப்தி போன்ற ரயில்களில் நிர்ணயித்து இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த ரயில்களில் 10 சதவீத படுக்கைகள் நிரம்பியவுடன் , அடிப்படை கட்டணம் 10 சதவீதம் உயரும். இதேபோன்று அதிகபட்சம் 50 சதவீதம் வரை கட்டணம் உயரும்.
தற்போது, அந்த ஃப்ளெக்ஸ் பேர் கட்டணத்தை ரயில்வே குறைத்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது . மேலும், 15 ப்ரீமியம் ரயில்களில் சிறப்புக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், 32 ரயில்களில் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில், சிறப்பு கட்டணத்தை ரத்து செய்து ரயில்வே துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது போக, 101 ரயில்களில் சிறப்புக் கட்டணம், அடிப்படை கட்டணத்தில் இருந்து சற்று குறைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பரிசாக ரயில் கட்டணம் குறைப்பு : அதிரடி அறிவிப்பு!!
மேலும், படுக்கைகள் 50சதவீதத்திற்கும் குறைவாக நிரம்பும் ரயிலில் சிறப்பு கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் பயன்பெறுவதற்காக இத்தகைய சிறப்பு சலுகை அறிவித்துள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.