நடிகை ரகுல் ப்ரீத் சிங் திரைத்துறையினர் படும் கஷ்டத்தை ரசிகர்களை புரிந்து கொள்ளுமாறு உருக்கமாக ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.

பிரபல தெலுங்கு நடிகையான ரகுல் பிரீத்சிங் முதலில் தமிழ் சினிமாவில் யுவன், தடையற தாக்க போன்ற படங்களில் நடித்து அறிமுகமானார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்பு கிடைக்காததால் தமிழில் இருந்து ஆந்திரா பக்கம் தனது கவனத்தை திருப்பிய ரகுல் பிரீத்சிங் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

திரைத்துறையினர் படும் கஷ்டத்தை எடுத்துரைத்த ரகுல் ப்ரீத் சிங்!! உருக்கமான பதிவு வைரல்!.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர் மற்றும் சூர்யாவின் என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இப்படங்களும் வெற்றி பெறாத நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தில் நடித்து முடித்து வேறு சில படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

திரைத்துறையினர் படும் கஷ்டத்தை எடுத்துரைத்த ரகுல் ப்ரீத் சிங்!! உருக்கமான பதிவு வைரல்!.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு போட்டியில் கலந்து கொண்ட ரகுல் பிரீத்சிங் திரைத்துறையினரை பற்றி உருக்கமாக சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், திரைத்துறையினர் ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வரை உழைக்கின்றனர். திரைத்துறையினரின் கஷ்டத்தை ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.

திரைத்துறையினர் படும் கஷ்டத்தை எடுத்துரைத்த ரகுல் ப்ரீத் சிங்!! உருக்கமான பதிவு வைரல்!.

மேலும் ” நான் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதான் விரும்புகிறேன். அதிலும் திகில் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தியேட்டரில் தான் பார்க்க வேண்டும். ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வரை உதவி இயக்குனர்கள், லைட்மேன், கேமராமேன், உள்ளிட்ட திரைத்துறையினர் உழைக்கின்றனர். திரைத்துறையினரின் கஷ்டத்தை ரசிகர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்” என உருக்கமாக பேசியுள்ளார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது