மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் வடிவேலு மற்றும் ஏ ஆர் ரகுமான் இணைந்து பாடும் பாடலின் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய திரையுலகில் தனது இசையால் மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி இசை புயலாக வலம் வருபவர் ஏ ஆர் ரகுமான். ஆஸ்கார் நாயகனாக கொண்டாடப்படும் இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

வித்தியாசமான கதைகளத்துடன் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நேற்றைய தினம் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த இந்நிகழ்ச்சியில் பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பங்கேற்று இருந்தனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சியின் மேடையில் ஏ ஆர் ரகுமான் இசையில் வைகை புயல் வடிவேலு அவர்கள் இணைந்து சங்கமம் திரைப்படத்தின் சிறப்பு பாடலை பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க செய்துள்ளனர். அதன் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து ‘இரு புயல்கள் ஒரே மேடையில்’ எனக் குறிப்பிட்டு ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.