Ragu Dhosham

* சர்ப்ப தோஷத்தை நீக்கும் மூலிகை ஆகாச கருடன். ஆகாச கருடன் என்ற இந்த கிழங்கை கயிற்றில் கட்டி தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும்.

* மேலும் காற்றில் உள்ள ஈரத்தை ஈர்த்து உயிர் வாழும் சக்தி கொண்டது. முளைவிட்டு கொடியாகப் படர்ந்து விடும்.

* ஆகாச கருடன் வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால், வீடு சுபிட்சமாக இருக்கும். இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம்.

* அதாவது கருடன் வந்தால் அந்த இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது. அப்படி மீறி வந்தால் அவற்றின் விஷம் பங்கப்படும். அவ்வளவு சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு.

* மேலும் இவை வீட்டில் இருந்தால் சர்ப்ப தோஷம் ராகு கேது தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

பயன்கள்:
* இது விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது. அத்துடன் இளைத்த உடலைத் தேற்றும். சூட்டை தணிக்கும். ஆனால் சித்த மருத்துவரின் ஆலோசனையின் படி சாப்பிடுதல் வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here