ரகு தாத்தா படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியாகிய மக்கள் மனதில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
சுமன் குமார் இயக்கத்திலும், ஹோம்பாலே பிலிம்ஸ், தயாரிப்பிலும் இந்த படம் உருவாகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான இந்த படம் வசூலிலும் பின் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ராஜேஷ் பாலகிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்ணாக நடித்து வந்தார்.
தற்போது இந்தப் படம் செப்டம்பர் 13ஆம் தேதி ஜீ5 ott தளத்தில் வெளியாக உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.