வசூலில் பின்வாங்கியுள்ளது ரகு தாத்தா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது.
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு ஜோடியாக ரவீந்திரன் நடித்திருந்தார். ஆணாதிக்கம் மற்றும் இந்தி திணிப்பு போன்ற விஷயங்கள் குறித்து இந்த படத்தில் பேசப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் முதல் நாளில் 25 லட்சமும், இரண்டாவது நாளில் 10 லட்சம் மட்டுமே வசூலாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அதே நாளில் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படமும், அருள்நிதி நடிப்பில் டிமாண்டி காலனி 2 திரைப்படமும், வெளியானது குறிப்பிடத்தக்கது. ரகு தாத்தா படத்தின் வசூல் சரிவிற்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என்று கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.