
சந்திரமுகி 2 படத்தின் சூட்டிங் முழுவதுமாக முடிவுக்கு வர ராகவா லாரன்ஸ் ராதிகாவுக்கு விலை உயர்ந்த கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் என பல திறமைகளுடன் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ்.
இவரது நடிப்பில் பி வாசு இயக்கத்தில் தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் லாரன்ஸ் உடன் இணைந்து ராதிகா, வடிவேலு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஷூட்டிங் முழுவதுமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிகை ராதிகாவுக்கு தங்க மோதிரம் மற்றும் விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை கிப்ட்டாக கொடுத்துள்ளார்.
இது குறித்த போட்டோக்களை வெளியிட்டுள்ள ராதிகா முதல் முறையாக தனக்கு விலை உயர்ந்த கிப்ட் கொடுத்த ஹீரோ ராகவா லாரன்ஸ் என்று சொல்லி நன்றி தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.