ஜெயிலர் படகுழுவுக்கு ராகவா லாரன்ஸ் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளுடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது பி வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தது தொடர்ந்து இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்திக்கு திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்து வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் ஜெயிலர் படம் குறித்து வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

அதாவது, நேற்றைய தினம் அனிருத் இசையமைப்பில் உருவான ஜெய்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான காவாலா பாடல் வெளியாகி இணையதளத்தில் பயங்கரமாக வைரலானது. இந்நிலையில், இப்பாடலை பாராட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் “தலைவர் ரஜினியின் அட்டகாசமான ஸ்டைல், அனிருத் இசை, தமன்னா நடனம் மற்றும் ஜானியின் நடன அமைப்பு ஆகியவை ‘காவாலா’ பாடலுக்கு மேலும், ஆற்றலை சேர்க்கிறது. ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைய படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தெரிவித்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.