Raghava Lawrence

தாய் தந்தையரைக் காக்க தாய் அமைப்பைத் தொடங்கும் ராகவா லாரன்ஸ் சில வருடங்களுக்கு முன் தன் தாயின் நினைவாக அவரின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் கட்டினார். தற்போது தாய் என்கிற அமைப்பைத் துவங்கவுள்ளார்.

தாய் அது வெறும் சொல்லல்ல, அது ஒரு தெய்வ மந்திரம். இல்லை இல்லை அது தான் தெய்வமே! இந்த பூமி பந்தில் உயிருள்ள அனைத்து ஜீவன்களுக்கும் தாய் எனும் அற்புத தெய்வம் நிச்சயம் உண்டு. தாய்மொழி, தாய்பூமி, தாய்மண், தாய்நாடு என அனைத்திலும் தாய் இருக்கிறது.

ஆனால், சில கல்மனம் படைத்தோர் வீடுகளில்தான் தாய் இல்லை. அனாதை இல்லங்களில், சாலை ஓரங்களில், குப்பை மேடுகளில் குற்றுயிரும் குலை பட்டினியாயும் கிடக்கிறார்கள்.

நாம் குழந்தையாய் இருக்கும் போது பேசத் தொடங்கும் முன்பே நாளெல்லாம் நம்மிடம் கொஞ்சி பேசி வளர்த்த தாயிடம் இன்று ஒரு வார்த்தை கூட பேசாமல் புறக்கணிப்பது எவ்வளவு பெரிய கொடுமை.

நம்மை 10 மாதம் கருவிலே சுமந்து ஈன்றெடுத்து தனது இரத்தத்தையே பாலாக்கி ஊட்டி வளர்த்த தாயை பரிதவிக்க விடுவது பெருங்குற்றமல்லவா?!!! ஆனால், ஈன்றெடுத்த தெய்வங்களை அவர்களின் இறுதி காலம்வரை கண் கலங்காமல் வைத்து காப்பாற்றிட வேண்டும் என்கிற அக்கறைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திட பல அமைப்புகள் இருந்தாலும், அன்றாடம் ஆலோசனை வழங்கி அவர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கும், பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கும் வழிவகை செய்யும் நோக்கத்தோடு; தாய் எனும் விழிப்புணர்வு சேவையைத் தொடங்குகிறார். தமிழகமெங்கும் அதைப் பற்றி பரப்பிட இருக்கிறார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்றார் ராகவா லாரன்ஸ். அங்கு ஒரு மூதாட்டி இவரைப் பார்த்ததும் என் மகன் வந்து விட்டான் என்று ஓடி வந்து கட்டி பிடித்திருக்கிறார். இதைப் பார்த்ததும் நம்மை பார்த்த மகிழ்ச்சியில் இப்படி செய்கிறார் என்று நினைத்திருக்கிறார்.

அடுத்து வேறொருவர் வந்திருக்கிறார். அவரை ப் பார்த்தும் அந்த மூதாட்டியும் அதேபோல் கட்டிபிடித்திருக்கிறார். இதைப் பார்த்து அங்கிருந்த ஒருவர், இவர்களை இங்கு விட்டுச்சென்ற பிள்ளைகள் அவர்களைப் பார்ப்பதற்கு கூட வருவதில்லை. அதன் விளைவாக யாரைப் பார்த்தாலும் தங்கள் மகன் வந்து விட்டான் என்று கட்டி பிடித்து தற்காலிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறார் என்று கூறியிருக்கிறார்.

இதைக் கேட்ட ராகவா லாரன்ஸ் அவர்களின் மனதிற்குள் எவ்வளவு வலி இருந்திருந்தால் இப்படி நடந்து கொள்வார்கள். இந்த சம்பவத்தின் பாதிப்பே இந்த அமைப்பு உருவாகிட காரணமாக இருந்தது. இனிமேல் இதுபோல் யாரும் தங்கள் பெற்றோர்களை விட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறார்
ராகவா லாரன்ஸ்.

இனி எந்த ஒரு தாய் தந்தையும் முதியோர் இல்லத்திற்குச் சென்று விட கூடாது. ஏற்கனவே விடபட்டிருந்தால், திரும்ப வரவழைத்து கோவில் தெய்வம் போல வணங்குவோம்.

அதற்கான முன்னோட்டமாக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இன்னும் சில நாட்களில் அப்பாடலுக்கு அவரே நடனம் அமைத்து வீடியோவாக வெளியிடவுள்ளார். இப்பாடல் வருகிற மே 12ஆம் தேதி அன்னையர் தினத்தன்று வெளியாகும்.

தாய் அது வெறும் சொல்லல்ல, அது ஒரு தெய்வ மந்திரம். இல்லை இல்லை அது தான் தெய்வமே! இந்த பூமி பந்தில் உயிருள்ள அனைத்து ஜீவன்களுக்கும் தாய் எனும் அற்புத தெய்வம் நிச்சயம் உண்டு. தாய்மொழி, தாய்பூமி, தாய்மண், தாய்நாடு என அனைத்திலும் தாய் இருக்கிறது.

ஆனால், சில கல்மனம் படைத்தோர் வீடுகளில்தான் தாய் இல்லை. அனாதை இல்லங்களில், சாலை ஓரங்களில், குப்பை மேடுகளில் குற்றுயிரும் குலை பட்டினியாயும் கிடக்கிறார்கள்.

நாம் குழந்தையாய் இருக்கும் போது பேசத் தொடங்கும் முன்பே நாளெல்லாம் நம்மிடம் கொஞ்சி பேசி வளர்த்த தாயிடம் இன்று ஒரு வார்த்தை கூட பேசாமல் புறக்கணிப்பது எவ்வளவு பெரிய கொடுமை.

நம்மை 10 மாதம் கருவிலே சுமந்து ஈன்றெடுத்து தனது இரத்தத்தையே பாலாக்கி ஊட்டி வளர்த்த தாயை பரிதவிக்க விடுவது பெருங்குற்றமல்லவா?!!! ஆனால், ஈன்றெடுத்த தெய்வங்களை அவர்களின் இறுதி காலம்வரை கண் கலங்காமல் வைத்து காப்பாற்றிட வேண்டும் என்கிற அக்கறைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திட பல அமைப்புகள் இருந்தாலும், அன்றாடம் ஆலோசனை வழங்கி அவர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கும், பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கும் வழிவகை செய்யும் நோக்கத்தோடு; தாய் எனும் விழிப்புணர்வு சேவையைத் தொடங்குகிறார். தமிழகமெங்கும் அதைப் பற்றி பரப்பிட இருக்கிறார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்றார் ராகவா லாரன்ஸ். அங்கு ஒரு மூதாட்டி இவரைப் பார்த்ததும் என் மகன் வந்து விட்டான் என்று ஓடி வந்து கட்டி பிடித்திருக்கிறார். இதைப் பார்த்ததும் நம்மை பார்த்த மகிழ்ச்சியில் இப்படி செய்கிறார் என்று நினைத்திருக்கிறார்.

அடுத்து வேறொருவர் வந்திருக்கிறார். அவரைப் பார்த்தும் அந்த மூதாட்டியும் அதேபோல் கட்டிபிடித்திருக்கிறார். இதைப் பார்த்து அங்கிருந்த ஒருவர், இவர்களை இங்கு விட்டுச்சென்ற பிள்ளைகள் அவர்களைப் பார்ப்பதற்கு கூட வருவதில்லை. அதன் விளைவாக யாரைப் பார்த்தாலும் தங்கள் மகன் வந்து விட்டான் என்று கட்டி பிடித்து தற்காலிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறார் என்று கூறியிருக்கிறார்.

இதைக் கேட்ட ராகவா லாரன்ஸ் அவர்களின் மனதிற்குள் எவ்வளவு வலி இருந்திருந்தால் இப்படி நடந்து கொள்வார்கள். இந்த சம்பவத்தின் பாதிப்பே இந்த அமைப்பு உருவாகிட காரணமாக இருந்தது. இனிமேல் இதுபோல் யாரும் தங்கள் பெற்றோர்களை விட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

இனி எந்த ஒரு தாய் தந்தையும் முதியோர் இல்லத்திற்குச் சென்று விட கூடாது. ஏற்கனவே விடபட்டிருந்தால், திரும்ப வரவழைத்து கோவில் தெய்வம் போல வணங்குவோம்.

அதற்கான முன்னோட்டமாக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இன்னும் சில நாட்களில் அப்பாடலுக்கு அவரே நடனம் அமைத்து வீடியோவாக வெளியிடவுள்ளார். இப்பாடல் வருகிற மே 12ஆம் தேதி அன்னையர் தினத்தன்று வெளியாகும்.

Raghava Lawrence

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.