Chandramukhi 2
சந்திரமுகி 2 திரைப்படம் ரஜினி இல்லாமல் உருவாக இருப்பதாக ஷாக்கிங் தகவல் ஒன்று கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் சந்திரமுகி.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் 150- க்கும் அதிகமான நாட்கள் ஓடியது.

தற்போது இப்படத்தை இயக்கிய பி. வாசு சந்திரமுகி 2 திரைப்படம் உருவாக இருப்பதாகவும் ரஜினிக்கு பதில் ராகவா லாரன்ஸை வைத்து இயக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

ராகவா லாரன்ஸ் பேய் படங்களுக்கு பெயர் போனவர் தான் என்றாலும் ரஜினி இல்லாமல் சந்திரமுகி 2- ஆ? என ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.