Vijay Fans :
Vijay Fans :

Vijay Fans : ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகம் அண்மையில் திரைக்கு வந்தது.

வழக்கமான அதே பாணி பழிவாங்கல் கதை என்றாலும் அதே பாணி நகைச்சுவை ப்ளஸ் திகிலை கலந்து சொன்ன விதத்தில் படம் பட்டையைக் கிளப்பி வருகிறது.

தமிழகம் முழுக்க 300-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலை அள்ளி வருகிறது.

இப்படம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக நாம் சொல்லியிருந்தோம். இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் 70 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இது ஒருபக்கம் இருக்க இப்படத்தில் இடம்பெற்ற நண்பனுக்கு கோவில் கட்டு பாட்டையும் திருமலை படத்தின் இண்ட்ரோ பாடலையும் எடிட் செய்து ரசிகர் ஒருவர் டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக லாரன்ஸ் தற்போது அதை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.