எனக்கு நண்பனா அது விஜய் மட்டும் தான் என ஓப்பனாக பேசியுள்ளார் இயக்குனர் ராகவா லாரன்ஸ்.

Raghava Lawrence About Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக டான்ஸ் மாஸ்டராக இயக்குனராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் தெலுங்கில் மாஸ் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

எனக்கு நண்பண்னா அது விஜய் மட்டும் தான் - ஓபனாக பேசிய ராகவா லாரன்ஸ்

அதன் பின்னர் தமிழில் முனி என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியை அடுத்து காஞ்சனா 1, 2, 3 என தொடர்ச்சியாக படங்களை இயக்கி வருகிறார். அடுத்ததாக சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அளித்த பேட்டி ஒன்றில் திரையுலகில் எனக்கு அவ்வளவாக நண்பர்கள் கிடையாது. எனக்கு நண்பன் என்றால் அது விஜய் மட்டும் தான் என கூறியுள்ளார்.