Radhika's Record in Tamil Chinnathirai
Radhika's Record in Tamil Chinnathirai

சின்னத்திரையில் இதுவரை எந்த நடிகையும் செய்யாத சாதனையை நடிகை ராதிகா செய்துள்ளார்.

Radhika‘s Record in Tamil Chinnathirai : தமிழ் சினிமாவில் 1980களில் இருந்து நாயகியாக நடித்து வந்தவர் ராதிகா. அதன் பின்னர் அம்மா வேடங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கினார்.

மேலும் இவர் சின்னத்திரை சீரியல்களில் தொடர்ந்து நாயகியாக பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் சித்தி 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் சந்திரகுமாரி சீரியல் மூலமாக வரலாற்று நாயகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

தற்போது ராதிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுவரை 6850 எபிசோட்களிலும், 3430 மணி நேரம் நடித்துள்ளதாகவும் சின்னத்திரையில் நுழைந்ததில் இருந்தே இரண்டு மாதங்கள் மட்டுமே பிரேக் எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்.. வரலட்சுமி புகாருக்கு ராதிகா பதில் – வைரலாகி வரும் பதிவு.!

மேலும் முதல் ஆளாக இந்த சாதனையை செய்ததில் மகிழ்ச்சி என அவர் தெரிவித்துள்ளார். இதனால் ராதிகாவிற்கு ரசிகர்களிடையே இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ரசிகர்களின் வாழ்த்துக்கள்