சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் உடல்நிலை நிலவரம் குறித்து நடிகை ராதிகா சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார்.

Radhika About Venu Aravind : தமிழ் சின்னத்திரையில் செல்வி, வாணி ராணி, சந்திரலேகா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் வேணு அரவிந்த். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த இவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது மட்டுமல்லாமல் மூளையில் கட்டி உருவாகி அறுவைச் சிகிச்சை செய்து அதனை நீக்கினர்.

நானும்  பிரம்மச்சாரிதான் : கண்ணன்

சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் உடல்நிலை நிலவரம் என்ன? நடிகை ராதிகா வெளியிட்ட தகவல்

இதனால் இவரது உடல்நிலை கடுமையாக மோசமடைந்தது. இவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். ‌‌ இவர் கோமாவில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகை ராதிகா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் வேணு அரவிந்த் உடல்நிலை மோசமாகத்தான் உள்ளது. ஆனால் அவர் கோமாவில் இல்லை. சுய நினைவுடன் தான் இருக்கிறார். அவர் நல்ல மனிதர். விரைவில் குணமடைய வேண்டும் என பதிவு செய்துள்ளார். ‌‌

₹80 ருபாய்க்கு Non Veg Meals | Chennai-யை கலக்கும் தேவர் ஹோட்டல்