radha-ravi

Radha Ravi : ராதா ரவிக்கு தொடர்ந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றது. திரையுலக பிரபலங்கள், நடிகர் சங்கத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கமும் லிஸ்டில் இணைந்துள்ளது.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராதா ரவி நயன்தாராவை கொச்சை படுத்தும் விதமாக பேசி இருந்தார்.

இதனால் ராதா ரவி நடிகர், நடிகைகள் என பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். நேற்று நடிகர் சங்கமும் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருந்தது.

இதெல்லாம் ஒரு வேலையா? – ராதா ரவியை எச்சரித்த நடிகர் சங்கம்.!

இதனையடுத்து தற்போது தயாரிப்பாளர் சங்கமும் ராதா ரவியை எச்சரித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் திரு.ராதாரவி திரைத்துறையில் உள்ள பல்வேறு சங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்தும் சக கலைஞரை தகாத வார்த்தைகளால் பேசுவது ஒட்டுமொத்த துறைத்துறைக்கும் மற்ற மூத்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது.

திரைத்துறையில் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கும் திரு.ராதா ரவி அவர்கள் நகைச்சுவை என்ற பெயரில், கைதட்டலுக்காக இது போன்ற கொச்சையான பேச்சுக்களை பேசி வருகிறார்.

அது திறைத்துரை மட்டுமின்றி பொது வாழ்க்கையிலும் அவரது மேன்மையை குறைப்பது மட்டுமல்லாமல் திரு.ராதா ரவி மேல் உள்ள மதிப்பையும் மரியாதையும் குறைக்கிறது.

அது மட்டுமின்றி திறைத்துயின்மேல் மக்களுக்கு நம்பிக்கையை சீரழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செயலுக்காக நடிகர் திரு.ராதாரவி அவர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து கொள்கிறது.

Producer Council Press Release

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.