Radha Ravi Family in Kotagiri
Radha Ravi Family in Kotagiri

கரோனா வைரஸ் பரவலை ராதாரவியின் மொத்த குடும்பத்தையும் சுகாதாரத்துரை தனிமைப் படுத்தி உள்ளது.

Radha Ravi Family in Kotagiri : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தாக்கம் தற்போது இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்துக்கும் மேல் சென்று கொண்டிருக்கிறது.

தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை 8000-ஐ தாண்டி விட்டது. அதிலும் சென்னை அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பதால் அங்கிருந்து எங்கு சென்றாலும் அவர்களை சுகாதாரத்துறை தனிமைப்படுத்தி விடுகிறது.

அஜித், ரஜினி, கமல் என அனைவரையும் வைத்து கரோனா விழிப்புணர்வையே காமெடியாக்கிடாங்களேயா – வரலட்சுமி வெளியிட்ட வீடியோவ பாருங்க.!

ராதாரவி குடும்பமும் கோத்தகிரியில் உள்ள ஒரு பகுதியில் உள்ள தனது சொந்த பங்களாவிற்கு படை எடுத்துள்ளது. அவர்கள் அங்கு சென்று இருப்பதை அறிந்த சுகாதாரத்துறை அவர்களிடம் சென்று ஆய்வு செய்துள்ளது. அவர்களுக்கு யாருக்கும் கரோனா அறிகுறி இல்லை.

உரிய அனுமதியைப் பெற்ற பின்னரே தான் கோத்தகிரி வந்ததாக ராதாரவி கூறியுள்ளார். இருப்பினும் பாதுகாப்பு கருதி அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரித்துள்ளது. அவர்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதற்காக தன்னார்வலர் ஒருவரையும் நியமிப்பதாகவும் கூறியுள்ளது.